ஆஸ்திரேலியாவில் தான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்பதை பகிரங்கமாக அறிவித்த எம்.பி.

ஆஸ்திரேலியாவில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் சட்டமசோதா மீதான இறுதி வாதம் நேற்று பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் நடந்தது. அப்போது எம்.பி.க்களிடையே கடுமையான காரசார விவாதம் நடைபெற்றது. லிபரல் கட்சியை சேர்ந்த எம்.பி. டிம் வில்சன் (37) என்பவர் திடீரென எழுந்து ஓரின சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவாக பேசினார். அப்போது தான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என பகிரங்கமாக அறிவித்தார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை. எனக்கு ஓரின சேர்க்கையாளர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்றார். மேலும் நிச்சயதார்த்தம் நடந்ததற்கு அடையாளமாக தனது வலது கைவிரலில் அணிவித்திருந்த மோதிரத்தை காட்டினார்.

மேலும் தனது ஓரின சேர்க்கை ஜோடியையும் டிம் வில்சன் பகிரங்கமாக அறிவித்தார். பார்வையாளர்கள் மாடத்தை நோக்கி பேசிய அவர் ‘‘அதோ பாருங்கள் அங்கு அமர்ந்திருக்கும் ரியான் பேட்ரிக் போல்ஜர்தான் எனது ஜோடி என்றார்.

அவரைப் பார்த்து என்னை திருமணம் செய்து கொள்கிறீர்கள் அல்லவா? என்றார். அதை ஆமோதிக்கும் வகையில் அவர் மவுனமாக சிரித்தப்படியே தலையை அசைத்தார். மேலும் தனது கைவிரலில் அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை தூக்கி காட்டினார்.

அதை தொடர்ந்து அவையில் இருந்த எம்.பி.க்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஓரின சேர்க்கையாளர் திருமண சட்ட மசோதா பாராளுமன்றத்தின் கீழ் சபையில் ஏற்கனவே நிறைவேறி விட்டது. பிரதிநிதிகள் சபையில் தற்போது விவாதம் நடைபெறுகிறது. இந்த வார இறுதியில் அது நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply