ஜெருசலேம் பிரச்சனை: நாளை கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

ஜெருசலேமை தலைநகராக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய இரண்டு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வந்தன. இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி அதற்கான நடவடிக்கைகளை கடந்த வாரம் டிரம்ப் தொடங்கியதாக தகவல் வெளியானது. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளையும் மீறி ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரித்து டிரம்ப் இன்று உத்தரவு வெளியிட்டார். மேலும் டெல்அவிவ்-ல் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றவும் டிரம்ப் உத்தரவிட்டார்.

டிரம்பின் இந்த முடிவுக்கு கத்தார், ஜெர்மனி, ஈரான், பிரட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா. சபை மற்றும் ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜெருசலேம் பிரச்சனை குறித்து ஐ.நா.சபையில் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என பொலிவியா, எகிப்து, பிரான்ஸ், இத்தாலி, செனகல், ஸ்வீடன், பிரிட்டன், உருகுவே ஆகிய எட்டு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கைகளை அடுத்து ஜெருசலேம் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடுகிறது.

அதன்படி நாளை காலை சரியாக 10 மணிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜெருசலேம் பிரச்சனை குறித்து மட்டும்தான் விவாதிக்கப்படும் என டிசம்பர் மாதத்திற்கான ஐ.நா. கவுன்சில் தலைமையான ஜப்பான் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply