மைத்திரியின் பதவிக் கால விவகாரம்: இன்று கூடவுள்ள குழு

மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்பது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு இன்று பகிரங்க நீதிமன்றத்தில் கூடவுள்ளது.

1978ம் ஆண்டு அரசியலமைப்புக்கு அமைய, 2015ம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதாகவும், எனவே தனது பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் எனவும், எனினும் அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலம் 5 வருடங்கள் என மாற்றப்பட்டுள்ளதாகவும், மைத்திரிபால சிறிசேனவால் உயர்நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, தனது பதவிக் காலம் குறித்து எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னர் கருத்துக்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்து, பிரதம நீதியரசர் பிரியசாத் டேப் ஐவர் அடங்கிய குழுவொன்றை நியமித்தார்.

இன்று குறித்த குழுவின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply