இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் எட்வேர்ட் இளவரசர் பங்கேற்பு!

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. குறித்த நிகழ்வில் பிரதான அதிதியாகபிரித்தானியாவின் எட்வர்ட் இளவரசர் பங்கேற்கவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டாம் எலிசபத் இளவரசி மற்றும் பிலிப் இளவரசரின் இளைய புதல்வரான எட்வேர்ட் இளவரசர் பிரித்தானியா அரசின் அரச முடிக்குரிய 09 ஆவது இளவரசர்ஆவார்.

மேலும் வெளியுறவு அமைச்சின் ஊடாக பிரித்தானிய அரசுக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழ் ஏற்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply