உணவாக தினமும் ஒரு கிலோ களிமண்: 99 வயதில் இப்படி ஒரு அதிசயம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் 99 வயது முதியவர் நாள்தோறும் ஒரு கிலோ களிமண் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துவரும் அதிசயம் நடந்து வருகிறது.ஜார்கண்ட் மாநிலம், சாஹேப்கானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காரு (வயது 99). இவர் கடந்த 1919-ம்ஆண்டு பிறந்தவர். இவர் தனது 11 வயதில் இருந்து களிமண் சாப்பிடும் பழக்கத்துக்கு அடிமையானார். சிறுவயதில் இருந்து தற்போது வரை காரு ஒருநாள் கூட களிமண் சாப்பிடாமல் இருந்ததில்லையாம்.

‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை’ என்பதைப் போல், சிறுவயதில் உண்டான பழக்கம் இப்போது காருவை தொற்றிக்கொண்டு களிமண் சாப்பிடுவதை விடமுடியாமல் தவித்து வருகிறார்.

இது குறித்து காரு நிருபர்களிடம் கூறுகையில், ”எனது நிதி நிலைமை நினைத்து எனக்கு வெறுப்பாக இருந்தது. என்னுடைய 10 குழந்தைகளுக்கு உணவு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். தற்கொலை செய்யவும் முயற்சி செய்தேன். அதன் பின் களிமண்ணை சாப்பிடத் தொடங்கினேன். அந்தப் பழக்கம் தொடர்ந்து களி மண் சாப்பிடுவதற்கு, அடிமையாகிவிட்டேன். இப்போது அந்த பழக்கத்தில் இருந்து என்னால் விடுபடமுடியவில்லை.

என் மூத்த மகன்கள் காரு, சியா, ராம் பாஸ்வான் உள்ளிட்ட குடும்பத்தினர் பலரும் என் பழக்கத்தை நிறுத்த முயற்சி் செய்தனர். ஆனால், என்னால், அந்த பழக்கத்தை நிறுத்த முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

காருவின் மகன் சியா ராம் பாஸ்வான் கூறுகையில், ”என் தந்தைக்கு இருக்கும் வினோதமான களிமண் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்த பல முறை முயற்ச்சி செய்தோம். ஆனால், அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. களிமண் எங்கு கிடைக்குமோ அங்கு சென்று நாள் ஒன்றுக்கு ஒரு கிலோவுக்கு குறையாமல் சாப்பிட்டுவார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக இதுவரை இவரின் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பும் வந்ததில்லை. ஆரோக்கியத்துடன், நல்ல உடல்நிலையுடன் எனது தந்தை இருக்கிறார்” என அவர் தெரிவித்தார்.

களிமண் சாப்பிட்டு உயிர்வாழும் காருவுக்கு கடந்த 2015-ம் ஆண்டு பீகார் மாநிலத்தின் ‘சபோர் கிரிஷி வித்யாலயா’ விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply