71 பயணிகளுடன் சென்ற ரஷிய விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது

ரஷியாவில் உள்ள டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது. ரஷியா தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஆர்ஸ்க் நகருக்கு இன்று சரடோவ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஏ.என். 148 ரக உள்ளூர் போக்குவரத்து விமானம் 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்டது.

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரேடாரில் இருந்தும் விமானம் காணாமல் போயுள்ளது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், மாஸ்கோ பகுதியில் உள்ள அர்குனோவோ கிராமத்தில் அந்த விமானம் விழுந்து நொருங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விமானத்தில் பயணம் செய்த 71 பேரின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply