லண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப்போர் காலத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு

லண்டன் நகர விமான நிலையத்தின் அருகே தேம்ஸ் நதியில் உள்ள ஜார்ஜ் வி டாக் என்ற கப்பல் கட்டும் தளத்தில் நேற்று பணிகள் நடைபெற்றபோது, இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்திய வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் உயிர்ப்புடன் இருந்தது. எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அப்பகுதியைச் சுற்றி 214 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டது. அருகில் உள்ள சில சாலைகளும் மூடப்பட்டன. பயணிகள் யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என்றும் தங்கள் பயணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தகவல் அனுப்பினர்.

இதற்கிடையே, தேம்ஸ் நதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யும் பணிகளைத் தொடங்கினர்.

லண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டதால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply