காபந்து அரசாங்கமொன்றை உருவாக்குக : வாசுதேவ நாணயக்கார

காபந்து அரசாங்கமொன்றை உருவாக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றை கலைப்பது குறித்து ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான தரப்புக்களுடன் இணைந்து பாராளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். காபந்து அரசாங்கத்தின் தலைவராக சமால் ராஜபக்ஸவை நியமிக்க வேண்டுமென தாங்கள் பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார்.

சட்ட ரீதியாக இந்த அரசாங்கத்தை பதவி விலக்க முடியாது என்ற போதிலும், தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க மக்கள் ஆணை வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply