ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் விஷேட சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு விஷேட சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.ஜனாதிபதி செயலகத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மாலிக் சமரவிக்ரம, செயலாளர் நாயகம் கபீர் ஹசிம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் எதிர்காலம் குறித்து இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆணையின்படி தனக்கு தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி உள்ளதாகவும், அதற்கு முன்னர் தீர்மானம் ஒன்றை எடுக்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூறியுள்ளார்.

இருப்பினும், குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட எந்த முடிவையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் இந்த சந்திப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுக்கு தௌிவுபடுத்தியுள்ளதாகவும், அனைத்து அமைச்சர்களையும் இன்று கொழும்பில் இருக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply