மக்கள் ஆணையை மீறக்கூடாது என சம்பந்தன் அறிவுறுத்தல்

கொழும்பு கூட்டு அரசில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, ஜனவரி 8ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை எவ்வகையிலும் பாதித்து விடக் கூடாது என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவையும் தனித்தனியாகச் சந்தித்து அறிவுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

தற்­போ­தைய அர­சி­யல் நெருக்­கடி குறித்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்­று­முன்­தி­னம் இரவு சந்­தித்த சம்­பந்­தன், அவ­ரு­டன் நீண்ட நேரம் முக்­கி­ய­மான விட­யங்­கள் தொடர்­பில் பேசி­னார் எனத் தெரி­கி­றது.

2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி மக்­கள் வழங்­கிய ஆணையை மீறி புதிய ஆட்­சி­யொன்று இப்­போது உரு­வாகி விடக் கூடாது என்று அரச தலை­வரை எச்­ச­ரித்த சம்­பந்­தன், உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் முடி­வு­களை வைத்து அரச தலை­வர் தேர்­த­லில் வழங்­கப்­பட்ட ஆணையை மீறக் கூடாது என­வும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

பின்­னர் தலைமை அமைச்­சர் ரணி­லைச் சந்­தித்த சம்­பந்­தன், இரு தலை­வர்­க­ளும் இணக்­கப்­பாட்­டு­டன் செயற்­பட வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யுள்­ளார். இந்­தச் சந்­திப்­பு­கள் தொடர்­பில் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­த­தா­வது:-

2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி மக்­கள் வழங்­கிய ஆணையை மீறும் வகை­யில் எவ­ரும் செயற்­ப­டக் கூடாது என்று நான் வலி­யு­றுத்­தி­னேன். முக்­கி­யத்­து­வம் வாய்ந்த பிரச்­சி­னை­கள் தீர வழங்­கப்­பட்ட அந்த மக்­கள் ஆணையை மீறி ஒரு புதிய ஆட்சி உரு­வாக்­கம் இடம்­பெற்­று­வி­டக் கூடாது என்று நான் அரச தலை­வ­ரி­டம் சுட்­டிக்­காட்­டி­னேன்.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் முடி­வு­க­ளைக் கொண்டு அரச தலை­வர் தேர்­த­லில் மக்­கள் வழங்­கிய ஆணை­யைப் புறந்­தள்­ளி­விட முடி­யாது என்­பதை நான் சொன்­னேன். அரச தலை­வர் எனது நிலைப்­பாட்டை, கருத்­துக்­களை விளங்­கிக் கொண்­டார். இந்­தச் சந்­திப்பு திருப்­தி­க­ர­மாக இருந்­தது. தலைமை அமைச்­ச­ரி­ட­மும் இவற்­றையே சொன்­னேன் என்­றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply