பாராளுமன்றம் நாளை கூடுமா?

எந்தக் குழு அரசாங்கத்தை அமைத்தாலும் குறித்த பிரகாரம் நாளை (19) காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என பாராளுமன்ற சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையின் கீழ் பாராளுமன்றம் நாளை கூடுமாயின் குழப்பமான ஒரு நிலைமை காணப்படும் எனவும், இதனால் பாராளுமன்ற கூட்டத்தை ஒருசில வாரங்களுக்கோ அல்லது ஒரு மாதத்துக்கோ ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம்  வேண்டுகோள் விடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற குழுவொன்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வினவிய போதே பாராளுமன்ற சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் மீண்டும் புதிய பாராளுமன்றமாகவே கூடும். ஜனாதிபதியின் தலைமையில் அந்த புதிய சபை அமர்வு ஆரம்பிக்கப்படும்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் இடம்பெற்ற விசேட விவாதத்தின் பின்னர் கடந்த 24 ஆம் திகதி சபை அமர்வுகள் நாளை (19) காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

எந்தக் குழு அரசாங்கம் அமைத்தாலும், நாளை பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் எனவும் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply