திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெறுவேன் – விஜயகாந்தை சந்தித்த கமல் பேட்டி

நடிகர் கமல்ஹாசன் வரும் 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக முக்கிய தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறு வருகிறார். அவ்வகையில், நேற்று நடிகர் ரஜினியை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை என்று கூறிய கமல், தன்னுடைய அரசியல் பயணத்திற்கு ரஜினி வாழ்த்து சொல்லியிருப்பதாக கூறினார். மதுரை கூட்டத்தில் பங்கேற்க ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்பின்னர், கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை கமல் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தை, நடிகர் கமல் இன்று சந்தித்தார். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பு குறித்து கமல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எனது அரசியல் பயணத்திற்கு, அரசியலில் மூத்தவரான விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன். நண்பர் விஜயகாந்தை சந்தித்து நீண்ட நாட்கள் ஆவதால் இன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். அப்போது நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று என்னை வாழ்த்தினார். திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெற்று காட்டுவேன்’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply