சிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினீயர் தஷ்வந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் தஷ்வந்த் குற்றம் இழைத்ததற்கான ஆதாரம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறிய நீதிபதி வேல்முருகன் தஷ்வந்த் குற்றவாளி என அறிவித்தார்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றம், ஆள்கடத்தல், தடயங்களை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.

தீர்ப்பை கேட்ட சிறுமி ஹாசினியின் தந்தை பாபு கண்ணீருடன், தனக்கு நீதி கிடைத்திருப்பதாக பேட்டியளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply