யாழ். துப்பாக்கிச் சூடு ; சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது : மஹிந்த

Monday, July 24th, 2017 at 11:54 (SLT)

யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான துப்பாக்கி பிரயோக அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டால், சாதாரண மக்களின் பாதுகாப்பு எவ்வாறு என்பதனை சிந்தித்து பார்க்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வாசிக்க >>>


இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ள அதிபர் உத்தரவு

Monday, July 24th, 2017 at 6:08 (SLT)

இந்தோனேசியாவில் அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ போதை பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில், அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் அரசியல் கட்சித்தலைவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், கைது செய்யும்போது எதிர்ப்பு தெரிவித்தால் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ளுங்கள் என்று சட்ட அமலாக்கல் பிரிவினருக்கு உத்தரவிட்டார். மேலும் வாசிக்க >>>


99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம்

Sunday, July 23rd, 2017 at 12:52 (SLT)

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று ஏற்படும்.இந்த அரிய சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் ஏற்படும். இந்த தகவலை ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும். மேலும் வாசிக்க >>>


நல்லூர் சம்பவத்திற்கு கூட்டமைப்பு கண்டனம்

Sunday, July 23rd, 2017 at 12:22 (SLT)

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.சம்பவம் தொடர்பான சதியை தௌிவுபடுத்த வேண்டும் என, அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வாசிக்க >>>


கண்ணீர் விட்டழுதார் நீதிபதி இளஞ்செழியன்

Sunday, July 23rd, 2017 at 11:56 (SLT)

நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் உறவினர்களின் காலில் வீழ்ந்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கண்ணீர் விட்டழுதார். நல்லூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திர என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் வாசிக்க >>>


மீனவர்களை விடுவிக்க மோடிக்கு மீண்டுமொரு கடிதம் : முதலமைச்சர் எடப்பாடி

Sunday, July 23rd, 2017 at 11:47 (SLT)

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 72 பேரையும் கடந்த காலங்களில், மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 148 படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, நேற்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேலும் வாசிக்க >>>


இலங்கை தனி ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல : அமைச்சர் மனோ கணேசன்

Sunday, July 23rd, 2017 at 11:41 (SLT)

இலங்கை தனி ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல என்ற உண்மையை தாம் வெளிக்கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்: மேலும் வாசிக்க >>>


நல்லாட்சி அரசாங்கம் எதுவரை? இருபெரும் கட்சிகளிடையே கருத்து முரண்பாடு

Sunday, July 23rd, 2017 at 11:37 (SLT)

நல்லாட்சி அரசாங்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதா? இல்லையா ? என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கிடையில் இருவேறு கருத்துக்கள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி, அரசாங்கத்தின் முழுமையான காலத்தை 2020 வரை இரு கட்சிகளும் இணைந்து கொண்டு செல்ல வேண்டும் என ஐ.தே.க.யின் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். மேலும் வாசிக்க >>>


நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் பலி

Sunday, July 23rd, 2017 at 9:56 (SLT)

நீதிபதி இளஞ்செழியனுக்கு 18 வருடங்கள் நம்பிக்கைக்குரியவராக இருந்த மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின்போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 58 வயதுடைய பொலிஸ் சார்ஜன் ஹேமரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார். மேலும் வாசிக்க >>>


ரஷ்யா மீது தடை கொண்டு வரும் விவகாரத்தில் அமெரிக்க எம்.பிக்கள் உடன்பாடு

Sunday, July 23rd, 2017 at 5:56 (SLT)

ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியா மீது தடை கொண்டு வர புதிய சட்டம் இயற்றுவதில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன்பாட்டை எட்டினர். ஏற்கனவே ரஷ்யா, ஈரான் மீது தடை கொண்டு வரும் சட்டம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பிரதிநிதிகள் சபையில் நிறுத்தி வைக்கப்பட்டது. குடியரசுக் கட்சியினர் இச்சட்டத்தில் வட கொரியாவையும் சேர்க்க வேண்டும் என்று கோரியதால் தடங்கல் ஏற்பட்டது. இரு சபைகளும் திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும் வாசிக்க >>>


ஆப்கானிஸ்தானில் 70 கிராமவாசிகள் கடத்தல் : 7 பேர் கொலை

Sunday, July 23rd, 2017 at 5:38 (SLT)

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள காந்தஹர் மாகாணத்தில் 70 கிராமவாசிகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டுள்ளனர். தலிபான்கள் தான் இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ஆப்கான் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க >>>


மக்கள் நலனுக்காக திரை ஊடகத்தைப் பயன்படுத்திய முதல் நடிகர் புரட்சித்தலைவர்: எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

Sunday, July 23rd, 2017 at 0:01 (SLT)

திருப்பூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
உழைப்பதற்கு அஞ்சாதவர்கள் திருப்பூர் மக்கள். திருப்பூர் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுகிறது. “வேலை காலியில்லை” என்ற அட்டை இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளிலும் தொங்கும். ஆனால் நமது திருப்பூரில் “வேலைக்கு ஆட்கள் தேவை” என்னும் வாசகம் பொறிக்கப்பட்ட விளம்பர அட்டை இருக்கும். இவ்வாறு உழைப்பவர்கள் திருப்பூர் வந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு வேலை உறுதி. திருப்பூருக்கு பல்வேறு சிறப்புகளும் இருக்கிறது.  மேலும் வாசிக்க >>>


வித்தியா படுகொலை வழக்கு: நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் மீது துப்பாக்கி சூடு

Saturday, July 22nd, 2017 at 23:53 (SLT)

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் மூவர் அடங்கிய நீதிபதிகளுள் ஒருவரான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் நீதிபதி இளஞ்செழியனிற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர். மேலும் வாசிக்க >>>


ஐ.எஸ். மற்றும் அல்-காய்தா தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு: 2 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை

Saturday, July 22nd, 2017 at 12:47 (SLT)

ஐ.எஸ். மற்றும் அல்-காய்தா தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 2 நிறுவனங்கள், 4 தனிநபர்கள் மீது ஐ.நா. சபை பொருளாதார தடைகளை விதித் துள்ளது. அல்-காய்தாவுடன் தொடர் புடைய ஜுண்ட் அல்-அக்சா, ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர் புடைய ஜெய்ஷ் காலித் பின் அல்-வாலித் ஆகிய நிறுவனங்கள் சிரியாவில் செயல்பட்டு வரு கின்றன. இதேபோல மேலும் 4 தனிநபர்களுக்கு இந்த தீவிர வாத அமைப்புகளுடன் நெருங் கிய தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் வாசிக்க >>>


கொலை செய்யப்பட்ட மகளின் இறுதி சடங்கில் பங்கேற்க டிரம்பிடம் ‘விசா’வுக்கு கெஞ்சும் தந்தை

Saturday, July 22nd, 2017 at 12:01 (SLT)

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியை சேர்ந்தவள் அப்பீகெய்ல்ஸ்மித் (11). கடந்த வாரம் இவளை அண்டை வீட்டு வாலிபர் ஆண்ட்ரூஸ் இராசோ (18) என்பவர் குத்தி கொலை செய்தார். பின்னர் அவளது உடலை சிதைத்து போர்வையில் சுற்றி அவள் தங்கியிருந்த கீன்ஸ்பர்க் நகர அடுக்குமாடி குடியிருப்பின் கூரையில் மறைத்து வைத்திருந்தார்.

இதற்கிடையே சிறுமி அப்பீகெய்ல் ஸ்மித் உடல் மீட்கப்பட்டது. கொலையாளி ஆண்ட்ரூஸ் கைது செய்யப்டட்டார். சிறுமி அப்பீல் கெய்லின் இறுதி சடங்கு விரைவில் நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க >>>