தமிழகத்தில் இலங்கை அகதியொருவர் தற்கொலை

Monday, March 25th, 2024 at 11:02 (SLT)

தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயத்தில் உள்ள இலங்கை அகதியான மறுவாழ்வு மையத்தில் வசித்து வந்த நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் நேற்று முன்தினம்(23) மணப்பாறையில் உள்ள நகராட்சி வளாகத்தில் வைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

மைத்திரியிடம் வாக்குமூலம் பெறப்போகும் CID

Sunday, March 24th, 2024 at 11:59 (SLT)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் கேரள கஞ்சாவுடன் கடற்படையினர் கைது

Sunday, March 24th, 2024 at 11:56 (SLT)

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் நேற்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு ஒப்பந்தம் கைச்சாது:அமைச்சர் மனுஷ நாணயக்கார

Sunday, March 24th, 2024 at 11:51 (SLT)

இஸ்ரேலில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்புகள் நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படும் எனவும், இவை ஒருபோதும் எனது தனிப்பட்ட இலாபத்துக்காக பயன்படுத்தப்படாது என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

எனது உயிருக்கு உத்தரவாதம் தந்தால் உண்மையை வெளியிடுவேன் : மைத்ரிபால

Sunday, March 24th, 2024 at 11:46 (SLT)

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தன் உயிருக்கு உயிருக்கு உத்தரவாதம் தந்தால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து அறிவிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பாராளுமன்றத்தை கலைக்கும் தீர்மானத்தில் கைச்சாத்திட எதிர்க்கட்சிகள் மறுப்பு : மே மாதத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு

Sunday, March 24th, 2024 at 11:40 (SLT)

பாராளுமன்றத்தை கலைத்து உடனடி பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான யோசனையை முன்வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ள நிலையில், அந்த தீர்மானத்தில் ஒருபோதும் கைச்சாத்திடவோ ஆதரவு வழங்கவோ போவதில்லை என்று அக்கட்சிகள் பதலளித்துள்ளன. இதேவேளை, மே மாதம் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கை – இந்தியா இடையிலான பாலம் குறித்து இவ்வாரம் முக்கிய பேச்சு : புதன்கிழமை டெல்லி செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Sunday, March 24th, 2024 at 11:36 (SLT)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை டெல்லிக்கு செல்கிறார். இரு நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை – இந்தியா இடையிலான பாலம் குறித்து இவ்வாரம் முக்கிய பேச்சு : புதன்கிழமை டெல்லி செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரத்நாயக்க அந்நாட்டு தலைவர்களுடன் இருநாடுகளுக்கு இடையிலான பாலத்தை கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

Sunday, March 24th, 2024 at 11:31 (SLT)

தலங்கம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விக்ரமசிங்கபுர பிரதேசத்தின் தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

மைத்திரிபால உடன் கைதுசெய்யப்படவேண்டும் : முஷாரப் எம்பி

Sunday, March 24th, 2024 at 11:28 (SLT)

குற்றச் செயலையும், குற்றவாளிகளையும் மறைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன உடன் கைதுசெய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வடக்கில் இடம்பெற்றுள்ள வன்புணர்வுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Sunday, March 24th, 2024 at 11:23 (SLT)

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு பொலிஸ் முறைப்பாடுகளின் பிரகாரம் பதிவான வன்புணர்வுகளில் 70 சதவீதமானவை பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சம்மதத்துடனேயே இடம்பெற்றுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு : மூவர் படுகாயம்

Saturday, March 23rd, 2024 at 11:24 (SLT)

லொறியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புத்தளம் – கொட்டுக்கச்சிய, கல்லகுளம் பகுதியில் நேற்று (22) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மொஸ்கோ தாக்குதல் – ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியது

Saturday, March 23rd, 2024 at 11:18 (SLT)

மொஸ்கோவின் மிகவும் பிரபலமான இசைநிகழ்ச்சி அரங்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ள அதேவேளை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் :  40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்

Saturday, March 23rd, 2024 at 11:14 (SLT)

ரஷ்யாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குரோகஸ் சிட்டி ஹோல் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு பலர் கூடியிருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் கடும் வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழப்பு

Saturday, March 23rd, 2024 at 11:08 (SLT)

கடும் வெப்பமான வானிலை காரணமாக துவிச்சக்கரவண்டியை செலுத்திய ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை திடீரென தரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

மேலும் வாசிக்க >>>

பிரிட்டிஸ் இளவரசி கேட்மிடில்டனிற்கு புற்றுநோய் : வீடியோ அறிக்கையில் விபரங்களை வெளியிட்டார்

Saturday, March 23rd, 2024 at 11:04 (SLT)

பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார். வீடியோ அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார் புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>