டெல்லியில் கோலாகல விழா: 14-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

Tuesday, July 25th, 2017 at 12:44 (SLT)

ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிந்தததைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய கடந்த 17-ந்தேதி தேர்தல் நடந்தது.இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீராகுமார் போட்டியிட்டனர். மேலும் வாசிக்க >>>


‘மொழிபெயர்ப்பு கருவி உதவியுடன் நாயுடன் பேச முடியும்’: அமெரிக்க பேராசிரியர் தகவல்

Tuesday, July 25th, 2017 at 12:29 (SLT)

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் தங்களது எஜமானரை பார்த்து குரைக்கும்.அதன் மூலம் தனது தேவையை அது வெளிப்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அக்குறையை போக்க கம்ப்யூட்டர் மொழிபெயர்ப்பு கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு அரிசோனா பல்கலைக்கழக பேராசிரியர் கான்ஸ்லோபான்ட்சிகோப் இதை தயாரித்து இருக்கிறார். மேலும் வாசிக்க >>>


இங்கிலாந்தில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை தண்ணீரில் மின்சாரம் எடுக்க திட்டம்

Tuesday, July 25th, 2017 at 12:25 (SLT)

நிலக்கரி, காற்று போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தற்போது தண்ணீரில் இருந்து காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இதற்கு மிதக்கும் காற்றாலை என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஸ்காட்லாந்து கடலில் அமைக்கப்பட்டுள்ளது. மிதக்கும் படகில் காற்றாலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க >>>


போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு : மண் ஏற்றுபவனுக்கு வெடி : பிள்ளையான்

Tuesday, July 25th, 2017 at 12:16 (SLT)

இரண்டாயிரம், மூவாயிரம் கோடி ரூபாவுக்கு போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு அதிரடிப் படையினர் பாதுகாப்பு வழங்கும் அதேவேளை, அன்றாடம் மண் ஏற்றுபவனுக்கு வெடி என நீதிமன்ற வாயில் வைத்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>


யாழ். துப்பாக்கிப் பிரயோகம் பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரண்

Tuesday, July 25th, 2017 at 12:11 (SLT)

நல்லூரில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜரானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். மேலும் வாசிக்க >>>


அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு : பொதுமக்கள் பல சிரமத்தில்

Tuesday, July 25th, 2017 at 12:07 (SLT)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று (25) காலை 8 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈட்டுப்பட்டுள்ளனர்.வைத்திய பீட மாணவ செயற்குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத்தை கைது செய்வதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நிலை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தும், சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க >>>


சவூதியில் 15 வயதுக்குட்பட்ட திருமணங்களை தடை செய்யப் பரிந்துரை

Tuesday, July 25th, 2017 at 11:59 (SLT)

சவூதி அரேபியாவில் 15 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளை திருமணம் முடித்துக்கொடுப்பது தடைசெய்யப்பட வேண்டும் என்றும், திருமண வயது 15 தொடக்கம் 18 வரை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் சவூதி சூரா கவுன்ஸில் உறுப்பினர்கள் அந்நாட்டு நீதி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளனர். மேலும் வாசிக்க >>>


பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் வக்கீல்கள் சந்திப்பு

Tuesday, July 25th, 2017 at 9:09 (SLT)

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சசிகலா சிறப்பு சலுகைகளை பெற்றுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு அறிக்கையை வழங்கினார். மேலும் வாசிக்க >>>


மலையை அசைப்பது சுலபம்; எங்கள் ராணுவத்தை அசைக்க முடியாது: இந்தியாவுக்கு சீனா மிரட்டல்

Tuesday, July 25th, 2017 at 5:38 (SLT)

மலையை கூட அசைத்து விடலாம், சீன மக்கள் விடுதலை ராணுவ படையை அசைக்கக்கூட முடியாது’ என இந்தியாவுக்கு நேரடியாக சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. சிக்கிம் மாநில எல்லையையொட்டி இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகள் உள்ளன. அந்த பகுதியை டோகா லா என இந்தியாவும், டோகாலாம் என பூடானும், டோங்லாங் என சீனாவும் அழைக்கிறது. இந்த பகுதியில் 3 நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என 2012-ம் ஆண்டு எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும் வாசிக்க >>>


ஜோர்டான் நாட்டில் இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

Tuesday, July 25th, 2017 at 5:33 (SLT)

மத்திய கிழக்கு நாடுகளான ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது. ஜெருசலேம் நகரில் உள்ள அல்-அக்‌ஷா மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் போலீசார் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ‘மெட்டல் டிடெக்டர்களை’ பதிக்க இஸ்ரேல் முடிவு செய்து உள்ளது. இதற்கு ஜோர்டான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இஸ்ரேலை கண்டித்து ஜோர்டானில் போராட்டங்களும் நடத்தப்பட்டது. மேலும் வாசிக்க >>>


பாகிஸ்தான்: முதல் மந்திரி வீட்டின் அருகே பயங்கர குண்டுவெடிப்பு : 22 பேர் பலி

Monday, July 24th, 2017 at 21:05 (SLT)

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் உள்ளது தகவல் தொழில்நுட்ப பூங்காவான அர்பா கரிம் டவர். இப்பகுதியில் முதல் மந்திரியின் மாடல் டவுன் குடியிருப்பு உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அர்பா கரிம் டவருக்கு வெளியே இன்று பிற்பகல் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். மேலும் வாசிக்க >>>


இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 28 கிலோ தங்கம் இந்தியாவில் பறிமுதல்

Monday, July 24th, 2017 at 12:15 (SLT)

இலங்கையிலிருந்து கடல்வழியாக கடத்தப்பட்ட 28 கிலோ கிராம் தங்கக் கட்டிகள் இந்திய புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மூன்று வெவ்வேறு தேடுதல் நடவடிக்கைகளில் இந்தத் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் வாசிக்க >>>


காபூலில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 24 பேர் பலி

Monday, July 24th, 2017 at 12:08 (SLT)

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலின் மேற்குப் பகுதியில் ஷியா ஹசாரா பிரிவினர் அதிகம் வசித்து வருகின்றனர். இன்று காலை அந்த பகுதியில் பொதுமக்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், வெடிகுண்டுகளை நிரப்பிய காரை பொதுமக்கள் மீது மோதச் செய்தான். இந்த திடீர் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பெண்கள், குழந்தைகள் என 24 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் வாசிக்க >>>


மெட்ரோ ரெயிலுக்காக சீனா பூமிக்கு அடியில் 31 மாடி ரெயில் நிலையம் கட்டுகிறது

Monday, July 24th, 2017 at 12:06 (SLT)

ரெயில் போக்குவரத்தில் சீனா அதிவேகமாக முன்னேறி வருகிறது. புல்லட் ரெயில், சுரங்க பாதை ரெயில், பறக்கும் ரெயில் என சாதனை படைத்து வருகிறது.இந்த நிலையில் மெட்ரோ சுரங்க பாதை ரெயிலில் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் பல அடுக்குமாடி கட்டிடங்களுடன் ரெயில் நிலையம் கட்டுகிறது. மேலும் வாசிக்க >>>


தி.மு.க., அ.தி.மு.க.வை ஒழிக்கவே ரஜினி, கமலை இழுக்கிறார்கள்: திருமாவளவன்

Monday, July 24th, 2017 at 12:01 (SLT)

வருகிற 27-ந் தேதி தி.மு.க. ஒருங்கிணைக்கிற மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்கிறாம். மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. முன் எடுத்து செல்லும் இந்த அறப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் பங்கேற்கிறோம். கடலூரில் நான் கலந்து கொள்கிறேன். மேலும் வாசிக்க >>>