அத்தியாவசிய தேவைகளுக்காகவே வடக்கு கிழக்கில் இராணுவம்

Tuesday, February 7th, 2012 at 2:49 (SLT)

வடமாகா ணத்தை அரசாங்க இராணுவ மய மாக்குகின்றது என்ற குற்றச்சாட்டினை திட்டவட்டமாக மறுத்துள்ள பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அத்தியாவசிய தேவைகளுக்காகவே நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவம் நிலைகொண்டுள்ளது. இதேபோன்று நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளன என்றும் கூறினார்.

இந்தியாவில் வெளியாகும் பிரபல ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றான ‘டெக்கான் குரெனிக்கல’ என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனை குறிப்பிட்டார். மேலும் வாசிக்க >>>


இலங்கையை தண்டனைக் களத்துக்கு இழுக்கப் போகிறதா அமெரிக்கா

Tuesday, February 7th, 2012 at 2:35 (SLT)

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவேண்டியது தவிர்க்க முடியாத விடயம் என்று அமெரிக்கா உணர்ந்துள்ளது. போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

கடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார். மேலும் வாசிக்க >>>


நாடு நகர திட்டமிடல் சட்டம் மூலம் மாகாண சபைகளின் அதிகாரம் பறிப்பு

Tuesday, February 7th, 2012 at 2:30 (SLT)

இலங்கையில் நாடு நகர திட்டமிடல் கட்டளைச் சட்டமூலத்தில் அரசு கொண்டுவர முயற்சிக்கின்ற திருத்தங்கள் மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக உத்தரவாதப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பறிக்கும் செயல் என அந்நாட்டு எதிர்கட்சிகள் கண்டித்துள்ளன.

இந்தச்சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கு முன்னதாக மாகாண சபைகளின் கருத்தைப் பெறவேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், அதனை அனைத்து மாகாண சபைகளிலும் நிறைவேற்றும் நடவடிக்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாசிக்க >>>


சட்டவிரோத வியாபாரிகளுக்கு இறுதிக் காலக்கெடு

Tuesday, February 7th, 2012 at 2:23 (SLT)

மன்னார் நகரிலுள்ள வாராந்த சந்தைத் தொகுதியை ஆக்கிரமித்திருக்கும் சட்ட விரோத வியாபாரிகள் அங்கிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு மன்னார் நகர சபையால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்தை இரு தசாப்தங்களுக்கு முன்னர் ‘பொல’ என்றழைக்கப்படும் வாரச் சந்தையாக இருந்தது. போர்க்காலங்களில் சந்தைத் தொகுதியை ஆக்கிரமித்த சில வியாபாரிகள் தினந்தோறும் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வாசிக்க >>>


சிறிரொலோவின் தலைவராக கஜேந்திரனும் செயலாளராக உதயனும் தெரிவு; மாவட்ட செயலாளர்களும் தலைமைக்குழுவும் நியமனம்.

Monday, February 6th, 2012 at 18:55 (SLT)

சிறிரொலோ கட்சியின் தலைவராக காத்தலிங்கம் கஜேந்திரனும் (சேனாதி), செயலாளர் நாயகமாக பரராஜசிங்கம் உதயராசாவும் (உதயன்), பொருளாளராக மகேந்திரனும் (சங்கர்) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சிறிரெலோ கட்சியின் மத்திய குழு, தலைமைக்குழு உட்பட்ட வருடாந்த கூட்டம் நேற்று வவுனியா வைரவப்புளியங்குளத்திலுள்ள கட்சியின் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இந்த கூட்டத்தில் சகல உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர். மேலும் வாசிக்க >>>


உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

Monday, February 6th, 2012 at 13:39 (SLT)

வவுனியா மாவட்டத்தில் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பல்கலைக்கழங்கள் மற்றும் கற்கை நெறிகளை தெரிவு செய்வது தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கொன்றினை வவுனியா மாவட்ட கல்வி சமூக அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

நாளை செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. இவ் வழிகாட்டல் கருத்தரங்கு தொடர்பாக சங்கத்தின் தலைவர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் கருத்து தெரிவிக்கையில், மேலும் வாசிக்க >>>


ரி.ஆர்.ரி. வானொலியின் பணியினால் 7ஆயிரம் தமிழ் மாணவர்கள் பயன்

Monday, February 6th, 2012 at 1:10 (SLT)

ரி.ஆர்.ரி. தமிழ்ஒலி வானொலியில்( பிரான்ஸ்) தாயக உறவுகளை கைவிடமாட்டோம் என்ற சமூக பணியின் மூலமாக கிளிநொச்சி, மன்னார் , வவுனியா போன்ற மாவட்டத்தில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 7000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி வருகின்றனர்.

போரில் பல்வேறு இழப்புக்களின் பின்னர் மீண்டெழுகின்ற வாழ்வில் கல்வியின் கட்டுமானங்களை கட்டியெழுப்புவதற்கும் பல்வேறு இடர்பாடுகளை வன்னி கல்விச் சமுகம் எதிர்கொள்கின்ற நிலையில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களை பரீட்சை நோக்கி நெறிப்படுத்துவதில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பலவேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் வாசிக்க >>>


சிரியா விவகாரத்தில் ரஷ்யா சீனா மீது மேற்குலக அணிகள் பாய்ச்சல்

Monday, February 6th, 2012 at 1:03 (SLT)

ஜனநாயகமான சிரியாவை விரும்புபவர்கள் அதிபர் பஷார் அஸ்ஸத்துக்கு எதிராக ஒன்று திரளவேண்டுமென்று அமெரிக்கா கூறியுள்ளது.

சிரியாவில் ஜனநாயக மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காக முயன்றுவரும் எதிரணியினருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லரி கிளிண்டன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வாசிக்க >>>


கஜேந்திரகுமாரின் கயிறு திரிப்பு; நக்கீரன் தங்கவேலுவின் பார்வை

Monday, February 6th, 2012 at 0:49 (SLT)

திருவிளையாடல் திரைப்படத்தில் ஒரு நகைச் சுவைக் காட்சி. மதுரையை ஆண்ட சண்பக பாண்டியனுக்கு ஓர் அய்யம். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா?’ என்பதே சண்பக பாண்டியனின் அய்யம். ‘உண்டு’ என்பது மதுரை இறையனார் கருத்து. ‘இல்லை’ என்பது புலவர் நக்கீரரின் வாதம்.

அய்யத்தைப் போக்கும் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு எனப் பாண்டிய மன்னன் முரசு அறிவிக்கிறான். இதைக் கேட்ட ஏழைப் புலவன் தருமி அந்தப் பரிசைப் பெற ஆசைப்படுகிறான். தருமியின் புலம்பலைக் கேட்ட இறைவன் அவனுக்கு ஒரு பாடலை எழுதிக் கொடுக்கிறார். தருமியாக நாகேசும் இறைவனாக சிவாஜி கணேசனும் நடித்திருந்தார்கள். மேலும் வாசிக்க >>>


அமெரிக்க அரசு இலங்கைக்கு கடிதம்

Sunday, February 5th, 2012 at 21:02 (SLT)

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்த அரசாங்கம் இதுவரை எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அமெரிக்க அரசு இலங்கைக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>


இனிமேலும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது

Sunday, February 5th, 2012 at 19:35 (SLT)

தமிழ் பேசும் மக்களும் அவர்களின் தலைவர்களும் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர் எனவும் இனிமேலும் ஏமாற்ற முடியாது. இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உபதலைவர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் ஆட்சியதிகாரம் பற்றிய இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு திருகோணமலை நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; மேலும் வாசிக்க >>>


குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழும் எமது விடுதலைக்கு வழி செய்யுங்கள்

Sunday, February 5th, 2012 at 15:10 (SLT)

இறுதி யுத்தத்தில் களத்தில் நின்று யுத்தம் செய்தவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டனர். யுத்தத்தில் ஆணை பிறப்பித்தோர் சுகபோகம் அனுபவிக்கின்றனர்.

ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாங்கள் பல வருடங்களாக குடும்ப உறவுகளைப் பிரிந்து சிறையில் வாடுகின்றோம். எமது விடுதலைக்கு வழி செய்யுங்கள்.

மகசின் சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சுமந்திரனிடம் நேற்று இவ்வாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர். மேலும் வாசிக்க >>>


சிதைவுறும் ஈரானியப் பொருளாதாரம்; அடி வாங்கப்போகும் அமெரிக்கா

Sunday, February 5th, 2012 at 4:18 (SLT)

இஸ்லாமிய நாடுகளில் துருக்கி, இந்தோனேசியா, சவுதி அரேபியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியா நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டது ஈரான். ஒபெக் நாடுகளில் இரண்டாவது பெரிய எரிபொருள் ஏற்றுமதி நாடு ஈரான்.

ஐக்கிய அமெரிக்காவின் திறைசேரி ஈரானின் ஐந்து அரச வங்கிகளின் மீது தடை விதித்ததைத் தொடர்ந்து ஈரானின் வெளியுலக நாணயத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. மேலும் வாசிக்க >>>


தமிழக அரசுடன் உறவுகளை முறித்துக் கொள்வது புத்தி சாதூரியமானதல்ல

Sunday, February 5th, 2012 at 0:55 (SLT)

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதனை தடுப்பதற்கு இந்தியாவுடனான உறவு மிகவும் இலங்கைக்கு மிக அவசியமானது. தமிழக அரசாங்கத்துடனான உறவுகளை இலங்கை அரசு முறித்துக் கொள்வது புத்தி சாதூரியமான தீர்மானமாக கருத முடியாது.

மேற்குலக நாடுகளுடனான உறவுகளை இலங்கை அரசாங்கம் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க >>>


13வது நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே 13 பிளஸ் குறித்து பேசமுடியும்

Sunday, February 5th, 2012 at 0:43 (SLT)

13வது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே அதற்கு அப்பால் அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சுவார்த்தைகளில் முனைப்புக் காட்ட முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேறெந்த கட்சியுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்ததை நடத்துவதற்கு தேவையில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க >>>