18 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்கும்

September 6th, 2010 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சற்றுமுன் நிறைவடைந்த த.தே.கூட்டமைப்பின் கூட்டமொன்றில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்

AddThis Social Bookmark Button

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு இலக்கியப் போட்டிகள்

September 6th, 2010 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவில் தமிழ்ச் செம்மொழி விழாவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்செம்மொழி விழாவில் தமிழியல் வரலாறு தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து உரையாற்றலாம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கையில் எட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்

September 6th, 2010 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் நிறுவப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் நோக்கில் முதல் கட்டமாக எட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்கு அதிக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

உயர் பாதுகாப்பு வலயங்களை முற்றாக நீக்க நடவடிக்கை: அரச அதிபர்

September 6th, 2010 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து, உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இடங்களைவிட்டு வெளியேற்றப்பட்ட வலிகாமம் வடக்கு  மக்கள் விரைவில் தங்களின் சொந்த மண்ணில்  சொந்த இடங்களில்  மீளக்குடியமரும் வாய்ப்புக் கிட்டியுள்ளது என்று தெரிவித்தார் யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார்.

நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாடப்பட்ட உலக அஞ்சல் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கை வருகை

September 5th, 2010 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் இன்று இலங்கை வருகிறார்.

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பினையேற்று வருகை தரும் அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், விமானப் படைத் தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார்.

இதேவேளை உயிர்நீத்த, இந்திய சமாதானப் படையினருக்காக பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் ஞாபகார்த்த தூபிக்குச் சென்று அவர் அஞ்சலி செலுத்துவாரென அறிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கைக்காக தமிழையோ தமிழுக்காக இலங்கையையோ விட்டுக்கொடுக்க முடியாது : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

September 5th, 2010 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையர்களாக இருப்பதற்காகத் தமிழையோ தமிழர்களாக இருப்பதற்காக இலங்கையையோ என்றுமே விட்டுக் கொடுக்க தமிழர்களாகிய நாம் ஒப்புக் கொள்ளப் போவதில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியாகத் தெரி வித்தார். முதலில் இலங்கையர்களாகவும் அடுத்து இனக் குழுமத்தின் அடையாளத்தையும் இணைத்துப் போற்றிக் கொள்வதாகவும், தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கையர் களாகவும் தமிழர்களாகவுமே வாழ விரும்புகிறார்கள் என்றும் கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் முன்னிலையில் சாட்சிய மளிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்க் கூட்டமைப்பு, இடதுசாரிகள் திங்களன்று இறுதி முடிவு

September 4th, 2010 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இடதுசாரிக் கட்சிகளும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்க உள்ளன.

உத்தேச யாப்புத் திருத்தத்தில் உள்ளடங்கும் விடயங்கள் குறித்து தமது கட்சி ஆராய்ந்து வருவதாகவும் 6ம் திகதி நடைபெறும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் அமைச்சர் டக்ளஸ் சாட்சியம்

September 3rd, 2010 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் செப்டெம்பர் மாத அமர்வு இன்று (03) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. பாரம்பரிய கைத்தொழில், சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கின்றார்.

ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் கொழும்பு 7, ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெறும் விசாரணையில் இன்று மாலை 4 மணிக்கு எம். ஐ. எம். மொஹிதீன் சாட்சியமளிக்கின்றார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புனர்வாழ்வு பெற்ற 508 பேர் நாளை பெற்றோரிடம் ஒப்படைப்பு

September 3rd, 2010 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புனர்வாழ்வளிக்கப்பட்ட 508 முன்னாள் புலி உறுப்பினர்கள் நாளை (4) தமது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு கூறியது. இதன் போது தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த 180 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட வயது குறைந்தோர், தாய்மார், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியோர் மற்றும் அங்கவீனமுற்றோரே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதிஷ்குமார் கூறினார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இந்திய வெளியுறவுச் செயலருடன் சந்திப்பு

September 2nd, 2010 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் இலங்கை தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளை இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.

எஸ்.ஜே.வி. சந்திரஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஈ.பி.டி.பி சார்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ராஜ்குமார், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பாக நல்லையா குருபரன், த.தே.கூ.வி.மு. சார்பாக எம்.கே.சிவாஜிலிங்கம், புளோட் அமைப்பு சார்பாக சதானந்தன், நாபா. ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக ஸ்ரீதரன், ஸ்ரீ-ரெலோ அமைப்பு சார்பாக உதயராசா, சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னார் படுகொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

September 2nd, 2010 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆண் ஒருவரைப் படுகொலை செய்து , சடலத்தை எரித்திருந்தனர் என்கிற சந்தேகத்தின் பேரில் மூன்று சந்தேகநபர்களை மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிவான் கே.ஜீவராணியின் உத்தரவின் பேரில் இம்மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வடபகுதியில் உயிர் இரசாயனத்துறை அபாரவெற்றி; முழு நாட்டின் நலனுக்கும் பயன்படுத்தக் கோருகிறார் பேராசிரியர் நவரட்ணம்

September 2nd, 2010 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வட மாகாணத்தில் மூன்று தசாப்த காலமாக யுத்தமும் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற போதிலும் உயிர் இரசாயனவியல் துறை (Biochemistry) தொடர்பான ஆராய்ச்சி தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக உயிர் இரசாயனவியல்துறை பேராசிரியரான பொன்னுச்சாமி நவரட்ணம் தெரிவித்தார்.

“சாவகச்சேரி, அல்லாரையில் பனங்கள்ளை பியராக மாற்றும் முயற்சியில் வெற்றி கண்டோம். கண்டாவளையில் பதநீரை போத்தலில் அடைக்கும் முயற்சியில் வெற்றி கிட்டியது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மீளக்குடியமர்த்தும் பணிகள் நிறைவடையும் தறுவாய்

September 2nd, 2010 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வன்னியில் இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் நிறைவடையும் தறுவாயை எட்டி வரும் நிலையில், மீளக் குடியமரும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சகல உதவிகளும் பெற்றுக் கொடுக்கப்படுமென்று இந்தியா உறுதியளித்துள்ளது.

இதேவேளை, முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவடைந்து வருவதால், உறவினர்கள், நண்பர்களுடன் தங்கியிருக்கும் இடம் பெயர்ந்தவர்கள் உடனடியாக வந்து மீள்குடியமர்வதற்கான பதிவை மேற்கொள்ள வேண்டுமென்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சஜித் பிரேமதாச ஆதரவானவர்கள் அரசமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு

September 1st, 2010 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதியின் 18வது அரசியல் திருத்தம் தொடர்பாக தீர்மானமொன்றை எடுப்பதற்கு இன்று (01) முற்பகல் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளவில்லை தெரியவருகிறது.

எனினும், சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவான லக்ஸ்மன் செனவிரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, எர்ல் குணசேகர, தலதா அத்துகோரள ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதியின் அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்கவேண்டுமென இன்று நடைபெற்ற அரசியல்சபைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களுக்கு எதிராக ஜேர்மனில் சட்ட நடவடிக்கை

September 1st, 2010 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் மூவருக்கு எதிராக அந்நாட்டின் சட்டத்தரணிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மூவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்ததோடு ஆயுதங்களையும் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கைதான வி.எஸ். விஜிகணேந்திரா (35), எம்.சசிதரன் (33), ரி.கோணேஸ்வரன் (39) ஆகிய மூவருமே விடுதலைப் புலிகள் சந்தேகநபர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஆவர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button