August 17th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
மாந்தை மேற்கு பிரதேசத்தில் 5கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த 68 பேருக்கு சுய தொழிலுக்கான உபகரணங்கள் இன்று (17.08.2010) வழங்கப்பட்டிருக்கின்றது. அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச மக்களின் சுயதொழிலை மேம்படத்தும் பொருட்டு மன்னார் பிராந்தியத்திற்குப் பொறுப்பான தள்ளாடி படைத்தலமையகத்தின் கட்டளையிடும் அதிகாரி பிரிக்கேடியர் மைத்திரி டயஸ் அவர்களின் ஆலோசனைக்கமைவாக 215ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் விக்கும் லியனகேயின் வழிகாட்டலில் 215ஆவது படைப்பிரிவின் சிவில் நிர்வாக அதிகாரி கேணல் நலிந்த மஹாவித்தாரணவின் ஏற்பாட்டில் இவ்வுபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »
August 9th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
மன்னாரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முழு மூச்சாக முன் னெடுக்கப்பட்டு வரும் நிலை இரவு பகலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. பொது மக்களின் பங்களிப்பு இருக்கின்றதோ இல்லையோ படைத்தரப்பினர், பொலிஸார் அரச திணைக்களங்கள் மற்றும் அரசு சாராக அமைப்புக்களினால் மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read the rest of this entry »
August 9th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை போக்கு வரத்து சபையின் மன்னார் சாலை இரு சேவைகளை ஆரம்பித்திருக்கின்றன. மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில்; பெரிய பண்டிவிருச்சான் பகுதியைச்சேர்ந்தவர்கள் கடந்த மாதம் தொடக்கம்; அப்பகுதிகளில்; மீள் குடியேறி வரும் நிலையில் அவர்களின் போக்கு வரத்தினைக்கருத்தில் கொண்டு இச்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »
August 9th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
மடுத்திருத்தலத்தின் வருடாந்த ஆவனித்திருவிழா திட்மிட்டப்படி இம்மாதம் 6ம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்திருக்கின்றது. யுத்தம் முழுமையாக முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்று வரும் இரண்டாவது வருடாந்த ஆவனித்திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருப்பதாக மடுத்திருத்தலத்தின் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது. Read the rest of this entry »
August 2nd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
இலங்கை வங்கியின் மன்னார் கிளையில் நாள்தோறும் பாரிய சன நெரிசல் ஏற்பட்டு வருவதால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிகின்றது.1970 ம் ஆண்டளவில் மன்னாரில் அமைக்கப்பட்ட இரண்டாவது கிளையாக இலங்கைவங்கி விளங்குகின்ற போதும் அது மன்னார் மக்களின் விவசாயம், மீன்பிடி, வர்த்தகம், கல்வி மற்றும் பல்வேறு பொதுத் தேவைகளையும் வெகு சிறப்பாக நிறைவேற்றி வருகின்றது. Read the rest of this entry »
July 29th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்துவரும் முஸ்லீம்கள் எதிர்வரும் றம்ழான் நோன்பு பண்டிகைக்காலத்திற்காக முன்னாய்த்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். மன்னாரிலிருந்து 1990ல் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களில்; சுமார் இரண்டாயிரத்தி ஐநூறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் இதுவரைகாலங்களிலும் மன்னாரில் மீள்குடியேறியிருக்கின்றனர். Read the rest of this entry »
July 29th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் நேற்றையதினம் மீண்டும் கொழும்பில் ஒன்றுகூடி தமிழ் மக்களின் அரசியல் நிலவரம் தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளனர். Read the rest of this entry »
July 25th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
ஜேர்மன் இசை நிகழ்வு சன நெரிசல் விபத்தில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு ஜேர்மனியில் நேற்று (24.07.2010) நடந்த மாபெரும் இசை நிகழ்வின் போது அங்கு இடம் பெற்ற மாபெரும் சன நெரிசலில் 19 பேர் உயிர் இழந்துள்ளனர் மேலும்349 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மத்திய ஜேர்மனியில் DUISBURG என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது இங்கு நடந்த காதலர் அணிவகுப்பு நிகழ்விலேயே இச் பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன் நிகழ்வில் சுமார் 14 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்று ஜேர்மனி செய்தியாளர் தெரிவிக்கின்றர்.காதலர்களின் இந்த சந்தோச நிகழ்வு துக்க நிகழ்வாய் மாறியதை இட்டு அணைவரும் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளனர்.
July 25th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
மன்னாரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற கோழி இறைச்சியின் விலை திடீரென வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் அது தற்போது ஒரு கிலோகிராம் 500 ரூபாவாக விற்பணை செய்யப்பட்டு வரும் நிலையில் சமயல் எரிவாயுவின் விலை ரூபா 1810 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. Read the rest of this entry »
July 18th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
புலம் பெயர்ந்த நாட்டில் தற்போது நாடத்தும் தேவையற்ற களியாட்டங்கள் புலிகளின் ஆதரவளர்களின் வருமானத்திற்கே. பாடசாலைகள் வருமானம் எங்கே, கோயில்கள் வருமானம் எங்கே, கடைசி நேரத்தில் போரட்டம் என்ற பெயரில் சேர்த்த தொகைப் பணம் எங்கே, இன்னும் எவ்வளவு எல்லாவற்றிக்கும் என்ன பதில்? தங்களை புலிகளின் செயர்பாட்டளர்கள் என்ற, இந்த நம்பிக்கை துரோகிகள் இப்போதும் பணம் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றார்களே அவர்களை நிச்சயம் அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். Read the rest of this entry »
July 14th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
July 14th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
ஜேர்மனியில் கிறீபில்ட் என்ற இடத்தில் இரண்டு இலங்கை தமிழர்கள் ஆற்றில் மூழ்கி பரிதபமான முறையில் மரணம் அடைந்துள்ளார்கள். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதவது சென்ற சனிக்கிழமை (10-07-2010) தற்போது ஜேர்மனியின் கால நிலை கடும் வெப்பநிலையில் இருப்பதால் இவர்கள் ஆற்றில் நீராட சென்ற வேளையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பரிதபமான முறையில் மரணம் அடைந்தார்கள் இவர்கள் மரணம் குறித்து கிறீபில்ட் மக்கள் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளனர்கள்
July 8th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் இன்றையதினம் மீண்டும் கொழும்பில் ஒன்றுகூடி தமிழ் மக்களின் அரசியல் நிலவரம் தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளனர். கடந்த மாதம் 24ம் திகதி தமது ஆரம்ப சந்திப்பினை மேற் கொண்ட தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தினர், இம்மாதம் 2ம் திகதி இரண்டாவது சந்திப்பில், திட்ட வரைபுகளை மேற்கொள்ளுமுகமாக சகல கட்சி பிரதி நிதிகளையும் உள்ளடக்கிய உப குழுவொன்றினையும் அமைத்திருந்தனர். கடந்த 4ம் திகதி கூடிய தமிழ்க்கட்சிகளின் அரங்க உபகுழுவினர் தயாரித்த திட்ட வரைபுகள் இன்றையதினம் கலந்தாலோசிக்கப்பட்டு அதன் நோக்கங்கள் மற்றும் அரசியல் வழிமுறைகள் தொடர்பான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read the rest of this entry »
July 2nd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் இன்றையதினம் ஒன்றுகூடி தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் உருவாக்கியதுடன் தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர். இன்றுகாலை கொழும்பில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தமிழ்க் கட்சிகளுக்கிடையில், தமிழ் மக்களின் நலன்களுக்கான பொது வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து ஆராயப்பட்டது. Read the rest of this entry »