Archive for July, 2009

மடு தேவாலயத் துப்புரவுப் பணிகளில் மன்னார் பங்குமக்கள்

Friday, July 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மடு தேவாலயத்தைத் துப்புரவு செய்யும் பொருட்டு மன்னார் மறை மாவட்ட மக்கள் தொடர்ந்தும் மடுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் தோட்டவெளி பங்கிலிருந்து 50 பேரும், உயிலங்குளம் பங்கிலிருந்து 80 பேரும், குஞ்சிக்குளம் பங்கிலிருந்து ... Read more..

நாளை முதல் கிழக்கு மாகாணத்தில் தனிநபர்கள் ஆயுதம் வைத்திருக்கத் தடை: எடிசன் குணத்திலக்க

Friday, July 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

"மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை முதலாம் திகதி முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்." என கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணத்திலக்க தெரிவித்தார்.நேற்று மாலை மட்டக்களப்பு தேவநாயகம் ... Read more..

வடக்கு கிழக்கு மீளக்குடியேற்றத்துக்கு இந்தியா உதவும்

Friday, July 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களை மீள்குடியோற்றும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசாங்கம் உதவ முன்வத்திருப்பதாக இந்திய வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா  தெரிவித்துள்ளார்.நேற்று இந்தியப்பாராளுமன்றத்தில் இலங்கைக்கான உதவிகள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டபோதே அமைச்சர் இதனைத்  தெரிவித்துள்ளார்.  Read more..

வத்திக்கான் பேராயர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Friday, July 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை வந்துள்ள வத்திகான் கத்தோலிக்க பேராயர் அதி வந்தனைக்குரிய மொன்சிக்னோர் ஜோசப் ஸ்பிரடி ஆண்டகை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந் துரையாடினார். ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் ... Read more..

யாழ்ப்பாணம் சுற்றுலாப்புரியாக மாற்றப்படும் : அமைச்சர் பைசல்

Friday, July 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ்ப்பாணம் சுற்றுலாப்புரியாக மாற்றப்பட உள்ளதாக சுற்றுலா மேம்மாட்டு அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஹிக்கடுவ கரையோரப் பகுதி சுற்றுலாத்தள அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,"முன்னாள் யுத்தகளமாக அன்றி யாழ்ப்பாணத்தின் பல்வகை சிறப்பம்சங்கள் ... Read more..

தற்கொலையாளிகள் உட்பட சகல மட்ட புலிகளுக்கும் புனர்வாழ்வு

Friday, July 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புலிகள் இயக்கத்திலிருந்த தற்கொலையாளிகள் உட்பட அனைத்துத் தராதரங்களையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வளிப்பதற்கு அரசாங்கம் விசேட செயல்திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளது. புனர் வாழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்காக மேஜர் ஜெனரல் தயா ரட்னாயக்க புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக ஜனாதிபதியால் நிய மிக்கப்பட்டுள்ளார். Read more..

சர்வதேச நாணய நிதியத்தின் எந்தவொரு நிபந்தனைக்கும் அரசு அடிபணியவில்லை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Friday, July 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குக் கடனுதவிவழங்கியதெனவும் எந்தவொரு நிபந்தனைக்கும் அரசாங்கம் அடிபணியவில்லையெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.கடந்த மூன்று வருட காலத்தில் 35,000 புதிய ஆசிரிய நியமனங்களை அரசாங்கத்தினால் வழங்க முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். Read more..

கொழும்பு-வவுனியா இரவு ரயில் சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பம்

Friday, July 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கொழும்பு -வவுனியா இரவு தபால் ரயில் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் 30ஆம் திகதி இரவு முதல் (நேற்று முதல்) சேவையிலீடுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று வவுனியாவில் தெரிவித்தார். Read more..

பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார்

Thursday, July 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட சிரேஸ்ட தளபதிகள் கொல்லப்பட்ட போதும், புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் தப்பிச் சென்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் அரசாங்கத்திற்கு தகவலளித்துள்ளதாக இராணுவத்தின் நம்பகரமான ... Read more..

யாழ். கொழும்பு விசேட விமான சேவை ஆகஸ்ட் 03 இல் ஆரம்பம்

Thursday, July 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு கொழும்புக்கும்  யாழ்ப்பாணத்துக்கும் இடையில் விசேட  விமானப் போக்குவரத்து சேவைகள் நடத்தப்படவுள்ளன. தனியார் மற்றும் விமானப் படையினருடன் இணைந்து இந்த விமான சேவையை வழங்குவதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு முன் வந்துள்ளது. இதன்படி ஆகஸ்ட்  03 ... Read more..

புலிகளின் கொழும்பு ஆயுத களஞ்சிய, பொறுப்பாளர், புலனாய்வு பிரிவினர் மூவர் கைது

Thursday, July 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொழும்புக்கான ஆயுத களஞ்சியப் பொறுப் பாளரிடமிருந்து கிடைத்த தகவல்களின் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் மேலும் பல புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படலாம் என்றும் அவ்வியக்கத்தினரால் ... Read more..

தபால் மூல வாக்களிப்பு 90 வீதம் பூர்த்தி

Thursday, July 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ்ப்பாணம் மாநகர சபை,வவுனியா நகரசபை தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு 90% நிறைவடைந்துள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர். யாழ். மாநகர சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவென 335 பேர் தகுதிபெற்றிருந்தனர். இதில் நேற்று முன்தினம் மாலை வரை ... Read more..

இலங்கையின் நடுநிலை கொள்கைக்கு பஹ்ரெய்ன் பிரதமர் பாராட்டு

Thursday, July 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அரபு நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடுநிலையான கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றமையைப் பாராட்டுவதாக இலங்கை வந்துள்ள பஹ்ரெய்ன் இராச்சியத்தின் பிரதமர் ஷேய்க் கலிபா பின் சல்மான் அல்- காலிஃபா தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் அரபு ... Read more..

இந்திய உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் முதலாவது ‘ரயில்பஸ்’ சேவை இன்று ஆரம்பம்

Wednesday, July 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்திய உதவியுடன் கிழக்கு மாகாண சபைக்கு நேரடியாக கிடைத்த பஸ் வண்டிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது"ரயில்பஸ் "வண்டி இன்று மாலை உத்தியோக பூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ரயில் போக்குவரத்து சேவையை விஸ்தரிக்கும் வகையில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட 10 ... Read more..

இலங்கை பஹ்ரைன் இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து

Wednesday, July 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கைக்கும் பஹ்ரைனுக்குமிடையே வெளியுறவுகள், பொருளாதாரம், வர்த்தகம், தொழிநுட்பக் கூட்டுறவு மற்றும் சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு இருதரப்பு உடன்படிக்கைகள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையே வெளியுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இலங்கை மற்றும் பஹ்ரைன் வெளியுறவு ... Read more..