Archive for August, 2009

பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னர் 100,000 அகதிகள் மீள் குடியேற்றப்படுவார்கள்: அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ்

Monday, August 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னர் வவுனியா இடைத்தங்கல்; முகாம்களில் தங்கியுள்ள சுமர் 100,000க்கும் மேற்பட்ட பொது மக்களை மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுடுக்கப்படும் என்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து செட்டிக்குளம் மெனிக் ... Read more..

இடம்பெயர் மக்களின் வைத்திய தேவைக்கு மருந்துகள் : சுவிஸ்

Monday, August 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இடம்பெயர்ந்த மக்களின் அவசர வைத்திய தேவைக்குரிய ஒரு தொகுதி மருந்துகளை சுவிற்சர்லாந்து வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வைத்திய சேவைகளை ஆற்றி வரும் வைத்தியசாலைகளில் அவசரமாகத் தேவைப்படுகின்ற ஒரு தொகுதி மருந்துகளையே சுவிற்சர்லாந்து அரசாங்கம், சுகாதார அமைச்சிடம் வழங்கியுள்ளது. 'அன்டி பயோடிக்' மருந்துகளைக் ... Read more..

புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர் கைது

Monday, August 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கடந்த 19 ஆண்டு காலமாக அங்கம் வகித்து வந்த சிரேஸ்ட தலைவர் ஒருவரே இவ்வாறு கல்கிஸ்ஸ ... Read more..

திஸ்ஸாநாயகத்திற்கு 20 வருட சிறைத்தண்டனை : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Monday, August 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. வழக்கு விசாரணையையடுத்து உயர்நீதிமன்றம் அவருக்கு 20 வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. Read more..

சரணடைந்த - கைதான புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வுக்கென 200 கோடி ரூபா

Monday, August 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்டவர்களது புனர்வாழ்வுக்காக சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பினூடாக 150 கோடி ரூபா முதல் 200 கோடி ரூபா வரையிலான நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் நீதி மற்றும் நீதி ... Read more..

வன்னியிலும் மட்டக்களப்பிலும் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

Monday, August 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வன்னியிலும் மட்டக்களப்பு- கோரக் கல்வி மடுவிலும் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மேற்கொண்ட தேடுதலின்போது 60 மி. மீ. மோட்டார் குண்டுகள் 37 மற்றும் 273 ஜொனிகுண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் மீட்டெடுத்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் அலுவலக அதிகாரியொருவர் ... Read more..

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: பத்மநாதனிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு

Sunday, August 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்த மத்தியப் புலனாய்வுத் துறையான சிபிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக சிபிஐ கேள்விகளைத் தயார் ... Read more..

வடக்கு முகாம்களிலிருந்து இதுவரை 10 ஆயிரம் பேர் தப்பிச் சென்றுள்ளனர்

Sunday, August 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வட பகுதி அகதி முகாம்களிலிருந்து சுமார் 10,000 பேர் தப்பிச் சென்றுள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களம் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிடக் கூடிய தொகையில் அகதிகள் முகாம்களிலிருந்து ... Read more..

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்த இந்தியாவுடன் இணைந்து இலங்கை செயற்படும்: ரொமேஸ் ஜயசிங்க

Sunday, August 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்தியாவுடன் இணைந்து,இடம்பெயர்ந்த மக்களின் மீள குடியமர்த்தல் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என புதிதாக நிய மிக்கப்பட்டுள்ள இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஐ.ஏ.என்.எஸ்.செய்தி சேவைக்கு அவர் வழங்கிய சிறப்புச் செவ்வியின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். Read more..

இனவாத அரசியல் நமது நாட்டுக்கு உகந்ததல்ல: ஜனாதிபதி மஹிந்த

Sunday, August 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ், சிங்களம், முஸ்லிம் என இனவாத அரசியல் நமது நாட்டிற்கு உகந்ததல்ல. குறுகிய தீர்மானங்களை தவிர்த்து நாட்டை முன்னேற் றக்கூடிய சிறந்த தீர்மானங்களை சிந்தித்து மேற் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடும் ... Read more..

வடக்கில் சிங்களவர் குடியேற்றப்படார் : ஊடகத்துறை அமைச்சர்

Saturday, August 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

"வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்" என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெள்ளியன்று தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை ஸ்ரீ.ல.சு.க. மக்கள் ... Read more..

செனல் - 4 வீடியோ காட்சி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் : ஐ.நா

Saturday, August 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பிரித்தானியாவின் செனல்௪ தொலைக்காட்சி சேவை அண்மையில் வெளியிட்ட வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத கைதுகள் மற்றும் படுகொலைகளுக்கான பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் தெரிவித்துள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது. Read more..

கடற்புலிகளை முற்றாக இல்லாதொழித்த இலங்கை கடற்படை உலகில் சக்திவாய்ந்தது: பாதுகாப்பு செயலர் கோத்தாபய

Saturday, August 29th, 2009 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

தாய்நாட்டை பயங்கர வாதத்திலிருந்து வெற்றி கொண்டதைப் போன்று இல ங்கையின் கடற்பரப்பை பாது காக்கும் பாரிய பொறுப்பு கடற்படைக்குரியது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கடற்புலிகளை முற்றாக இல்லாதொழித்த இலங்கை கடற்படையினர் உலகில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த வர்களாக ... Read more..

கே.பி.யை விசாரிப்பதற்கு இந்திய மத்திய புலனாய்வுக் குழு அடுத்த மாதம் அளவில் கொழும்பு வரும்

Friday, August 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்த மாத ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி.என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசைக் கோரும் நாடுகடத்தல் கோரிக்கை ஒன்றை விடுப்பதென இந்தியா தீர்மானித்துள்ளது. 1991ஆம் வருட ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் உள்ள பாரிய ... Read more..

பிரபாகரன் கடைசி முயற்சி என்ன புதுத்தகவல் வெளியானது

Friday, August 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை இராணுவத்தால் கொல்லப்படுவதற்கு முன் காட்டுப் பகுதிக்குள் தப்பிச் செல்வதற்கு பிரபாகரன் முயற்சித்தார் என கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கோகுலன் மாஸ்டர் தொரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்தவருமான கோகுலன் மாஸ்டர்,இலங்கை இராணுவத்தால் வவுனியாவில் ... Read more..