Archive for September, 2009

சுமத்ராவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் இலங்கைக்கு பாதிப்பில்லை

Wednesday, September 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்தோனேஷிய, சுமத்ராவில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரிச்டர் அளவில் இது 7.9 ஆகப் பதியப்பட்டுள்ளது. எனினும் இதன் விளைவாக இலங்கைக்கு எதுவித பாதிப்பும் இல்லையென வளி மண்டல திணைக்களம்  தெரிவித்துள்ளது. மலேஷியா, சிங்கப்பூர் ... Read more..

யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்திரிக்காவை கைது செய்ய சர்வதேச மனித உரிமைகள் பேரவை திட்டம்

Wednesday, September 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக முன்னாள் இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கைது செய்ய சர்வதேச மனித உரிமைகள் பேரவை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு ஒன்றில் வைத்து சந்திரிகாவை கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள இணையதளமொன்று செய்தி ... Read more..

கண்ணிவெடி அகற்றும் பணிக்கு ஐ.நா. உதவி

Wednesday, September 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடபகுதியில் கண்ணிவெடி அப்புறப்படுத்தும் பணிகளுக்கு 10 கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்க ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இணக்கம் தெரிவித்துள்ளது.வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ... Read more..

தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது: ஈ.பி.ஆர்.எல்.எப்

Wednesday, September 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் பத்மநாபா பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரப் பகிர்வு, அகதிகள் நிவாரணம் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் இன்றியமையாததென கட்சியின் தலைவர் ... Read more..

கே. கே. எஸ். வரையான ரயில் நிலையங்களை மீளமைக்கும் பணி 27 நிறுவனங்களிடம் இன்று கையளிப்பு

Wednesday, September 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ். தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கும் வகையில் காங்கேசன் துறை வரை யான ரயில் நிலையங்களை மீளமை க்கும் பணிகள் 27 உள்நாட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கு இன்று  உத்தியோகபூர்வமாக கையளிக் கப்பட உள்ளதாக போக்கு வரத்து அமைச்சு ... Read more..

ஆனந்தகுமாரசாமி முகாமில் கைதான 19 பேரும் நீதிமன்றத்தினுடாக விடுதலை

Tuesday, September 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஆனந்தகுமாரசாமி முகாமில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின்போது விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்ட 19 பேரும் ஞாயிறன்று வவுனியா மாவட்ட நீதிபதியின் இல்லத்தி்ல், அவரது முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்றத்தின் ஊடாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர், ஆனந்தகுமாரசாமி ... Read more..

மக்களைத் துரிதமாக மீள்குடியேற்றத் தவறினால் கசப்புணர்வே மேலோங்கும் : பான் கீ மூன்

Tuesday, September 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் மக்களை துரிதமாக மீள்குடியேற்றுவதற்கு அரசு தவறும் அதேவேளையில் முகாம்களின் மோசமான நிலையினால் அவலங்கள் மேலும் அதிகரிப்பது கசப்புணர்வு மேலும் தீவிரமடைவதற்கே வழிவகுப்பதாக அமையும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் செயலாளர் நாயகம் ... Read more..

கண்ணிவெடிகளின் மேல் அப்பாவிகளை தள்ளிவிட நாம் தயாரில்லை: ஜனாதிபதி

Tuesday, September 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வன்னியில் அங்குலத்திற்கு அங்குலம் புதைக்கப்பட்டிருக்கும் நிலக் கண்ணி வெடிகளின் மேல் அப்பாவி மக்களைத் தள்ளிவிட நாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம், இந்த நாட்டை மீண்டும் அடகு வைப்பதற்கும், ஏலத்தில் விடுவதற்கும் நாம் ஒரு போதுமே ... Read more..

ஜேர்மன் தேர்தலில் ஏஞ்சலா மேர்கலின் கிறிஸ்தவக் கட்சி வெற்றி

Tuesday, September 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜேர்மனில் நடைபெற்ற பாரா ளுமன்றத் தேர்தலில் அதிபர் ஏஞ் சலா மேர்கலின் கட்சி அதிக ஆசனங் களைக் கைப்பற்றியது. 622 பாராளு மன்ற ஆசனங்களில் ஏஞ்சலா மேற்கலின் கிறிஸ்தவக் கட்சி 332 ஆசனங்களை வென்றுள்ளது. 55 வயதுடைய ஏஞ்சலா மேர்கல் மீண்டும் ... Read more..

பொலிஸ் சேவைக்கு வடக்கிலிருந்து 500 பேர் இணைப்பு

Monday, September 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பொலிஸ் சேவைக்கு வட மாகாணத்திலிருந்து 500 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து 500 பேரை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று நடைபெற்றன. நாளையும் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுமென யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச். மாரப்பன தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம், ... Read more..

சர்வதேச தரத்திற்கு ஏற்ப இடம்பெயர்ந்த மக்களுக்கு வசதிகள் அளிக்கப்படும்: பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க

Monday, September 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சர்வதேச தரத்திற்கு ஏற்ப இடம்பெயர்ந்த மக்களுக்கு வசதிகள் அளிக்கப்படுவதோடு, இந்தப் பணிகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சமூக அமைப்புகள் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன. சர்வதேச தரப்பின் ஒத்துழைப்புடன் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்றுவதே எமது நோக்கமாகும் என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். Read more..

ஐ.நா. கூட்டத் தொடரில் பாதுகாப்புசெயலர் கோத்தபாயவும் பங்கேற்பு

Monday, September 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் 64 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கை தூதுக்குழுவில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 64 ஆவது கூட்டத் தொடர் கடந்தவாரம் ஆரம்பமானது. ... Read more..

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி: அமைச்சர் நிமல்

Monday, September 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலு ள்ள யுத்த குற்றச் செயல்கள் தொடர்பான பிரிவில் இலங்கைக்கு எதிராகத் தற்போது சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியும், சில அரச சார்பற்ற நிறுவனங்களும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள ... Read more..

வட மாகாணத்தில் 500 பொலிஸாரை ஆட்சேர்க்க 6500 பேர் விண்ணப்பம்

Monday, September 28th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடக்கில் 500 பொலிஸாரை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்றும் நாளையும் நடைபெறுமென யாழ்ப்பாணத்துக்கான பொலிஸ் சுப்ரின்டன்ட் ஜி. எச். மாரப்பன தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இந்நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. செப்டெம்பர் ... Read more..

இலங்கைத் தமிழர்களை நிரந்தரமாக தமிழகத்தில் குடியமர்த்த முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுறுத்தல்

Sunday, September 27th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையிலிருந்து வந்து 10, 20 ஆண்டுகளாக தமிழகத்தில் தங்கியுள்ள தமிழ் அகதிகளை நிரந்தரமாக தமிழகத்திலேயே குடியமர்த்த செய்ய வேண்டும் என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெறற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் ... Read more..