Archive for July, 2010

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் சாரதி திருமலைப் பொலிஸில் சரண்

Saturday, July 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தனிப்பட்ட சாரதி இன்று பொலிஸாரிடம் சரண் அடைந்தார். வி.சதிகுமரன் என்கிற முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் திருகோணமலை பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்துள்ளார்.கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகள் ... Read more..

தமிழர் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால் தமிழ் அரங்கில் இணைவதில் தவறில்லை

Saturday, July 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழர் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதில் தவறில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றால், ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைவந்து செயற்படத் தயார் ... Read more..

வெளிநாடு சென்றவர்ளின் பெயர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கக்கூடாது:த.தே.கூ

Saturday, July 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குக் சென்றவர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தைவிட்டு வெளியேறியவர்களின் விருப்பத்தை அறியாது, அவர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது. அவர்கள் மீண்டும் வரமாட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டால் மட்டு மே நீக்குவது குறித்த முடிவுக்கு செல்லவேண்டும் என்று ... Read more..

மாந்தை மேற்கு காட்டுப்பகுதியினுள் கண்டுபிடிக்கப்பட்ட யானை இன்று சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது

Saturday, July 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதிக்குள் ஊடுருவிய யானை வனப்பரிபாலன அதிகாரிகளினால் இராணுவத்தினதும் பொதுமக்களினதும் உதவியுடன் இன்று (30.07.2010) ஏற்றிச்செல்லப்பட்டிருக்கின்றது. நேற்றய தினம் அடம்பன் பிரதேசத்தில் நுழைந்த மேற்படி யானையினைத்தேடி இராணுவத்தினர் தமது நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர் இதனை அடுத்து ... Read more..

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம்: அந்நாட்டு அமைச்சரவையில் தீர்மானம்

Saturday, July 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் நேற்று முன்தினம் இடம்பெற்று முடிந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read more..

இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு ஜப்பான் தயார்

Saturday, July 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜப்பான் இலங்கையுடன் விசேட வர்த்தக ஒப்பந்தமொன்றை செய்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக ஜப்பானிய பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ் ஆகியோர் ஜப்பானிய பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் மசாயுகி ... Read more..

மட்டக்களப்பில் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம்

Friday, July 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அரசின் ஒரு வகையான காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தில்- காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட ஆரையம்பதி கிராமத்தில் வாழும் ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதல் ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். Read more..

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீதான பயண எச்சரிக்கை பிரிட்டனால் முற்றாக நீக்கம்

Friday, July 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வட மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு பிரித்தானிய பிரஜைகள் செல்லக் கூடாது என்று பிறப்பித்திருந்த இருந்த பிரயாண எச்சரிக்கையை பிரித்தானிய அரசு இன்று முதல் இல்லாமல் செய்துள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இப்பிரயாண ... Read more..

‘வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்’அலுவலகம் மீது தாக்குதல்

Friday, July 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையில் பிரபல வானொலி ஒலிபரப்பு நிறுவனமான 'வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்' (Voice of Asia Network) இன் சியத்த எப்.எம்., றியல் ரேடியோ, வெற்றி எப்.எம்., ஆகியவற்றின் செய்திப்பிரிவு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. Read more..

கே. பி. உட்பட புலம்பெயர் தமிழர்கள் வடக்கு அபிவிருத்திக்கு உதவ முன்வருகை

Friday, July 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கே. பி. எனப்படும் குமரன் பத்மநாதன் அடங்கலான பல புலம்பெயர் தமிழர்கள் வடபகுதி அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ளனர். நாட்டின் அழிவுக்காக பயன்படுத்தப்பட்டவர்களை நாட்டின் நலனுக்காக பாதிப்பில்லாதவாறு பயன்படுத்த தயாராக உள்ளோம். இலங்கை சட்டத்தின் பிரகாரம் கே. பி. அரச சாட்சியாக மாறும் ... Read more..

G.s.p+ நிறுத்தத்தால் பாதிப்புக்கு இடமில்லை ஸ்திரமான நிலையில் பொருளாதாரம்

Friday, July 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | Comments Off

ஜீ. எஸ். பி. சலுகை ஓகஸ்ட் 5ம் திகதியுடன் ரத்தாகின்ற போதும் நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு முகம் கொடுப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு 6.2 பில்லியன்களாக உயர்ந்துள்ளதாகவும் இதனூடாக ஒரு ... Read more..

முறிகண்டியில் மீள் குடியேற்ற சிக்கல்

Thursday, July 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையின் வடக்கே பல இடங்களில் இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம் பெயர நேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவது கேள்விக் குறியாகியுள்ளது. நாட்டின் வடக்கே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ... Read more..

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி - 77,500 ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்ட் நஷ்ட ஈடு

Thursday, July 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 2009 ஆம் ஆண்டு லண்டனில் வாழும் இலங்கை தமிழர்கள் ... Read more..

வடக்கின் அபிவிருத்திக்கு புலிகளின் நிதியைப் பயன்படுத்துவதில் தவறில்லை : கெஹெலிய

Thursday, July 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்படி தெரிவித்தார். Read more..

மன்னாரில் முஸ்லீம்கள் நோன்பிற்காக தயாராகுகின்றனர்

Thursday, July 29th, 2010 Posted in TELOnews | No Comments »

மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்துவரும் முஸ்லீம்கள் எதிர்வரும் றம்ழான் நோன்பு பண்டிகைக்காலத்திற்காக முன்னாய்த்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். மன்னாரிலிருந்து 1990ல் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களில்; சுமார் இரண்டாயிரத்தி ஐநூறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் இதுவரைகாலங்களிலும் மன்னாரில் மீள்குடியேறியிருக்கின்றனர். Read more..