Archive for November, 2011

வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவாவிட்டால் அது உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு நாம் செய்யும் துரோகம்: சிவாஜிலிங்கம்

Sunday, November 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை வெறுமனே மாவீரர் தின கொண்டாட்டங்களகவோ அல்லது ஒரு நிகழ்ச்சி நிரல் போல செய்துவிட்டு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைப்பார்களானால் ஈழப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு நாங்கள் செய்யக்கூடிய ஒரு துரோகமாகத்தான் ... Read more..

2012 மும்மொழி ஆண்டு - தொடக்கி வைக்க அப்துல் கலாம் வருகை

Sunday, November 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

2012 ஆம் ஆண்டை மும்மொழிக் கொள்கை ஆண்டாக அரசாங்கம் பிரகடனப்படுத்த உள்ளது என அமைச்சரவைப் பேச்சாளார் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ‘மும்மொழிக்கான இலங்கை‘ என்ற 10 வருடத் திட்டம் ஜனாதிபதியால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. மும்மொழிகளை கற்பதற்கு மக்களை ஊக்குவிப்பதும், அவர்களிடையே ... Read more..

அரசு கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை குழப்பும் சதியில் சில ஊடகங்கள்

Sunday, November 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் சமாதானப் பேச்சுக்கள் குறித்து எதிர்மறையான செய்திகள் தமிழ்ப் பத்திரிகைகள் சிலவற்றில் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காது என்றும், பேச்சுக்களை எப்படியும் சிங்கள மக்கள் குழப்புவார்கள் என்ற விதமான செய்திகள் ... Read more..

இலங்கை வந்தார் யசூசி அகாஷி

Sunday, November 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையின் சமாதான, புனர்வாழ்வு, புனர்நிர்மாண விவகாரங்களுக்கான ஜப்பானிய அரசின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி நேற்று இலங்கைக்கு வந்தார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழாவில் அவர் அதிதியாக பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்று இரவு இலங்கைக்கு வந்த யசூசி அகாஷியை பண்டாரநாயக்க சர்வதேச விமான ... Read more..

கோயில் மணியடிக்கத் தடை; பிபிசிக்கு பேசியவர் வீடு தாக்கப்பட்டது

Sunday, November 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் கொண்டாடப்படுகின்ற இந்த வாரத்தில் இலங்கையின் வடக்கே யாழ்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள இந்து ஆலயங்களில் மணியொலிக்க கூடாது என்று இராணுவம் தடை விதித்துள்ளதாக பிபிசிக்கு தெரிவித்த பிரதேச சபைத் தலைவரின் வீடு தாக்கப்பட்டுள்ளது. Read more..

அமெரிக்காவிடம் கூட்டமைப்பு வழங்கிய அறிக்கையின் நகல் அரசிடம் சிக்கியது; கொழும்பு அரசியலில் பரபரப்பு; தீர்வு முயற்சி பாதிக்கலாம்

Saturday, November 26th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அமெரிக்கப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. Read more..

தற்போதைய நிலை நீடித்தால் டியூனிசியா, லிபியா எகிப்துக்கு ஏற்பட்ட நிலைமையே இங்கும் உருவாகும் : மங்கள் சமரவீர

Saturday, November 26th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சட்டம் மழுங்கடிக்கப்பட்ட எந்தவொரு நாட்டிலும் வரவு செலவுத் திட்டம் வெற்றியளிக்கப் போவதில்லை.நாட்டின் இன்றைய நிலைமை நீடிக்குமேயானால் டியூனிசியா, லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளின் நிலைமையே இங்கும் உருவாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீர நேற்று ... Read more..

முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் கோம்பாவிலில் மீள்குடியேற்றம்

Saturday, November 26th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் வலயம் - 0, வலயம் - 2 ஆகியவற்றில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களில் தெரிவுசெய்யப்பட்ட 72 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கோம்பாவில் பகுதியில் முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை குடியேற்றப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் முள்ளிவாய்க்கால் ... Read more..

பொலிஸ் சேவைக்கு யாழில் மேலும் பலர் இணைப்பு

Saturday, November 26th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ் மாவட்டத்தில் பல இளைஞர் யுவதிகள் இலங்கைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இவர்களை உதவிப் பொலிஸ் பரிசோதகர், கொன்ஸ்டபிள் ஆகிய சேவைகளில் இணைப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் நவம்பர் 28, 29 மற்றும் 30ம் ... Read more..

பாதுகாப்பு தரப்பினரைத் தவிர எவரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது : மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க

Friday, November 25th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரையும், காவற்துறையினரை தவிர எவரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. இராணுவம் தற்போதைய நிலைமையில் சண்டையிடுபவர்கள் என்ற நிலையிலிருந்து பாதுகாப்பாளர்கள் என்ற இடத்தை அடைந்து கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் ஆயுதங்கள் ஒருபோதும் பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படமாட்டாது என யாழ். மாவட்ட கட்டளைத் ... Read more..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதுபோல இந்நாட்டில் இராணுவ ஆட்சி கிடையாது : முரளிதரன்

Friday, November 25th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதுபோல் இந்நாட்டில் இராணுவ ஆட்சி என்று ஒன்று இடம்பெறவில்லை என்று தெரிவித்த பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கு யாவரும் ஆலோசனைக் கூற வேண்டிய தேவை இல்லை என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் ... Read more..

ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம் : கோத்தபாய ராஜபக்ஷ

Thursday, November 24th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் யாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கமும் இராணுவமும் ஒருபோதும் தயங்காது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ  தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த ... Read more..

தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடும் உரிமை தமிழர்களுக்கு உண்டு

Thursday, November 24th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் தான் பாடவேண்டும் என நிர்ப்பந்திப்பதோ அல்லது கட்டாயப்படுத்துவதோ சட்டவிரோதமான செயலாகவே கருதப்படும். தமிழ் மக்கள் தமது தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடும் உரிமை அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தேசிய மொழிகள் ... Read more..

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க ஆளும் தரப்பு சபையில் பிரேரணை

Thursday, November 24th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையிலுள்ள சகல மக்களும் தமது தனித்துவங்களைப் பாதுகாப்பதையும் ஒரே தேசமக்களாக வாழ்வதை அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தும் வகையில் பரிந்துரைகளை வழங்க பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென்ற பிரேரணை நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா இதனை நேற்று ... Read more..

இராணுவத் தலையீட்டால் இந்திய வீட்டுத்திட்டம் தோல்வி

Wednesday, November 23rd, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்திய அரசினால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் தோல்வியடைந்ததற்கு இராணுவத்தினரின் தலையீடுகளே காரணம். பயனாளிகளின் பட்டியல் தயாரிப்பிலும் இராணுவத்தினரின் அங்கீகாரம் பெறவேண்டியுள்ளது. 50 ஆயிரம் வீடுகளில் இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை 50 வீடுகளே கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ... Read more..