நாட்டின் அபிவிருத்திக்கு புலம்பெயர்ந்தோரின் ஒத்துழைப்பு அவசியம்

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையரதும் ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றிய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் கடந்த சனிக்கிழமை (25) ஹுஸ்டன் நகரத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.

ஹுஸ்டன் நகரில் வசிக்கும் இலங்கையர்கள் வெஸ்டின் ஹோக் ஹோட்டலில் ஜனாதி பதிக்கும் அவரது பாரியாருக்கும் விசேட வரவேற்புபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

500க்கு மேற்பட்ட இலங் கையர்கள் கூடியிருந்த இந்த நிகழ்வில் ஹுஸ்டன் நகரின் காங்கிரஸ் பிரதிநிதி சீலா ஜெக்சன் மற்றும் ஹுஸ்டன் மேயர் அனிஸ் பார்க்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கை தற்போது இன, மத, பேதமின்றி அனைவருக்கும் சமாதானமாக வாழக் கூடிய நாடாக உள்ளது. 2005 இல் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு மக்கள் எனக்கு ஆணை வழங்கினர். அதனை நான் செவ்வனே நிறைவேற்றியுள்ளேன். அது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ள ப்பட்ட யுத்தமல்ல.

இதேவேளை 2010 இல் மக்கள் மீண்டும் எமக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஆணை வழங்கி யுள்ளனர். அதனை நிறைவேற்றுவதற்கு வெளி நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களினதும் ஆதரவு எதிர்காலத் திலும் அவசியப்படுகின்றது என்றார்.

இந் நிகழ்வில் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி சீலா ஜெக்ஸன் லீ உரையாற்று கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கை துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் இரு நாடுகளினதும் நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படும் வகையில் ஜனாதிபதி யின் விஜயம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply