புதுடெல்லி சென்றார் கரு ஜெயசூரிய; ரணிலைக் கைகழுவியது இந்தியா

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐதேகவின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய புதுடெல்லி சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் புதுடெல்லி சென்ற கரு ஜெயசூரிய, அங்கு இந்திய அரச தலைவர்களையும், அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

கரு ஜெயசூரியவுக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது வழக்கத்துக்கு மாறானதொரு விவகாரமாகவே கருதப்படுகிறது.

வழக்கமாக ரணில் விக்கிரமசிங்கவுக்கே புதுடெல்லியில் இருந்து அழைப்பு வருவதுண்டு.

இம்முறை கரு ஜெயசூரிய அழைக்கப்பட்டுள்ளதால், ரணில் விக்கிரமசிங்கவை இந்தியா கைகழுவி விடத் தயாராகியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐதேகவில் தலைமைத்துவ நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் ரணில் விக்கிரமசிங்கவை, புதுடெல்லிக்கு அழைத்துப் பேசிய இந்திய அரசு, அவரது பதவியைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply