‘நாம் தமிழர்’ கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்குப் பிறக்காதவர்கள்: கடலூர் மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ்வில் சீமான்

இந்தத் தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். `நாம் தமிழர்` கட்சியில் யாரும் இல்லை. `நாம் தமிழர்` கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல என்று `நாம் தமிழர்` கட்சித் தலைவர் சீமான் பேசியுள்ளார். தமிழகத்தில் கடலூரில் மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியொன்றில் சீமான் இவ்வாறு பேசியுள்ளமை கவனிக்கத்தக்கது.

கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சீமான், பேராசிரியர் தீரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் யாரும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல என்றார். இதைக் கேட்டதும் கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் முகம் சுளித்தனர். சீமான் பேச்சில் இடம் பெற்ற வார்த்தைகள் மிகக் கடுமையானவை என்று அவர்கள் அதிருப்தியுடன் வெளியேறியதைக் காண முடிந்தது

நாம் தமிழர் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து அதைக் கட்சியாக தற்போது மாற்றி செயல்பட்டு வருகிறார் இயக்குநர் சீமான். கடலூரில் நடந்த மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இடம் பெற்ற சீமானின் பேச்சுக்கு சுய கெளரவம் உள்ள தமிழர்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டுமென குரல்கள் உலகளாவிய ரீதியில் வலுப்பெற்று வருகின்றன.

ஒரு பொது அவையில் இவ்வாறு பேசிய சீமான் மீது வழக்கு தொடர தமிழ் நாட்டை சேர்ந்த மகளிர் அமைப்புகள் சில முயற்சிகள் மேற்கொள்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply