என்னை இராணுவம் கடத்தவில்லை: மாணவன் லத்தீஸ்

தான் கடத்தப்பட்ட சம்பவத்தில் இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடத்தப்பட்டு விடுதலையான யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீட மாணவன் வேதரணியம் லத்தீஸ் தெரிவித்துள்ளார்.

தான் கடத்தப்பட்டுது உண்மை எனக்கூறிய அவர், யார் கடத்தினார்கள் என்பது தெரியாது எனவும் இராணுவத்தினராலோ பொலிஸாராலோ தான் கடத்தப்பட்டதாக எந்தவொரு ஊடகத்திற்கும் தெரிவிக்கவில்லை எனவும் அவ்வாறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தாருந்தால் அது அவர்களின் சொந்த கற்பனையே எனவும் லத்தீஸ் குறிப்பிட்டுள்ளார்.

லத்தீஸ் தெரிவித்த கருத்துக்களை காணொளியில் காண்க.

கடந்த மாவீரர் தினத்தன்று இரவு கைதடியில் உள்ள தனது விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த லத்தீஸ் திடீரென காணாமல் போயிருந்தார்.

இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் கடந்த திங்கட்கிழமை இரவு வீடு திரும்பினார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்க ஒழுங்களை மேற்கொண்டமைக்காக இவர் பாதுகாப்புத் தரப்பினரால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இவ்வாறான நிலையில் தான் கடத்தப்பட்டதை உறுதி செய்துள்ள லத்தீஸ், யார் கடத்தினார்கள் என்றுத் தெரியாது எனக் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply