அநுராதபுர சிறைக்கைதிகள் மீதான தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது: பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

1983 வெலிக்கடை சிறைப்படுகொலை அன்றைய தமிழ் இளைய தலைமுறையை வெஞ்சினத்திற்கும் விரக்திக்கும் இட்டுச் சென்றது.

இதன் பின்னர் பிந்தனுவௌ நலன்புரி நிலையத்தில் தமிழ் கைதிகள் படுகொலை இப்போது அநுராதபுரம் சிறைக்கைதிகள் மீதான தாக்குதல். இலங்கை சிறைகளில் தமிழ் கைதிகளுக்கு பாதுகாப்பில்லை என்ற அவப்பெயர் தொடர்கிறது.

இன வன்முறைகளுக்கான பேரினவாத உணர்வுகள் வலுவடைகின்றனவே தவிர குறைவடையவில்லை என்பதனையும் மேற்படி அதிர்ச்சி சம்பவம் உணர்த்தி நிற்கிறது.

தமிழ் கைதிகளின் பாதுகாப்பு, நீதி விசாரணை என்பன பிரதானப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிடில் மனித உரிமை தொடர்பான அபகீர்;த்தியான இலங்கையின் பெயரை மாற்றுவது கடினமானதாகும்.

மேலாதிக்க வெறிபிடித்த அதிகாரிகளால் இவர்கள் மேற்பார்வை செய்யப்படக்கூடாது. கருணையும், மனித உரிமை பற்றிய அறிவும் கொண்ட அதிகாரிகள் முதலில் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த கைதிகளின் நிலை போன்றதுதான் ஏறத்தாழ தமிழர்களின் நிலையும்.

தமிழ் மக்களும் தங்களுக்கு பாதுகாப்பின்மையையே உணர்கிறார்கள்.

அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் உரிமை ஐக்கிய இலங்கைக்குள் அங்கீகரிக்கப்படுகையிலேயே இத்தகைய பிரச்சினைகளுக் நிரந்தர தீர்வு காணமுடியும். இல்லையேல் இத்தகைய சம்பவங்கள் விஷச்சுழல் போல் தொடரும்

சமூகங்கள் ஐக்கியப்படுவதும் அமைதியாக சமாதானமாக இருப்பதும் இந்த விடயங்களில்தான் தங்கியிருக்கிறது.

தி. ஸ்ரீதரன்
பொதுச் செயலாளர்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply