இலங்கை மீனவர்கள் 27 பேர் விடுதலை

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 27 பேரும், அவர்களின் ஐந்து படகுகளும் இன்று விடுவிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் இந்திய கடலோர காவற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 21 இலங்கை மீனவர்கள் சட்ட நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

சில மீனவர்கள் மீது ஆந்திர பிரதேஸம் மற்றும் குஜராத் மாநில நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply