நாமல் ராஜபக்ஷவின் பெயரில் மோசடி

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என தன்னை அறிமுகப்படுத்தி வின்கமாண்டர் ஒருவரின் இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு விமானப்படை தளபதிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய நபரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத் தகவலின்படி நடந்த சம்பவம் இதோ..,

8 மாதங்களுக்கு முன்னர் விமானப்படை தளபதிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தன்னை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனக்கூறி, வவுனியாவுக்கு இடமாற்றம் பெற்றுள்ள வின்கமாண்டர் ஒருவரின் இடமாற்றத்தை உடன் இரத்து செய்யும்படி கோரியுள்ளார்.

இத்தொலைபேசி அழைப்பு பொய்யானது என அறிந்து கொண்ட விமானப்படை தளபதி இது குறித்து விசாரணை நடத்துமாறு பணித்தார்.

இதன்படி குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய நபர் மற்றும் அவருக்கு உதவி புரிந்த விமானப்படை வின்கமாண்டர் ஆகியோர் குறித்து தகவல் பெற்றுக் கொண்டனர்.

மேலதிக ஆலோசனைகளுக்கென தாம் திரட்டிய தகவல்களை சட்ட மா அதிபரிடம் சமர்பித்து ஆலோசனைப் பெற்றனர்.

இதன்படி குறித்த வின்கமாண்டரை குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று (16) கைது செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றம் சந்தேகநபரை தலா 10 லட்சம் ரூபா இரு சரீரரப் பிணைகளில் விடுவித்தது.

கைது செய்யப்பட்ட வின்கமாண்டரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலின்படி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய நபரை கைது செய்ய குற்றத்தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply