தனி தமிழ் ஈழம் அமைவது தான் இந்தியாவிற்கு பாதுகாப்பு
தனி தமிழ் ஈழம் அமைவது தான் இந்தியாவின் பாதுகாப்பிற்கு உகந்தது என்று நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியை அடுத்த கல்லுப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான்,
இலங்கை போர்க்குற்றம் செய்த நாடு என்பது ஐ.நா பெருமன்றத்திலேயே நிரூபிக் கப்பட்டுள்ளது. போர்க்குற்றம் செய்து ஒரு இனத்தையே அழித்த இராணுவத்திற்கு இந்தியா வலிந்து போய் இராணுவ உதவிகளை செய்வதும், பயிற்சி அளிப்பதும் ஏற்புடையது அல்ல. இச்செயல் இலங்கையின் போர்க்குற்றத்தை அங்கீகரிக்கும் செயலாகும்.
தனி ஈழம் அமைவதுதான் இந்தியாவின் பாதுகாப்பிற்கு உகந்தது. இலங்கையில் சீனா, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையே தரும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் அபத்தமானது, பாதுகாப்பற்றது.
தனி ஈழம் தந்தையின் விரல்பிடித்து நடக்கும் குழந்தை போல இந்தியாவின் வழிப்படி நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.




Leave a Reply