ஆஸி. செல்ல முற்பட்டு விபத்துக்குள்ளான 65 இலங்கையர்கள் மீட்பு

இலங்கை திருகோணமலை பால்வெட்டி துறையை சேர்ந்த 65 பேர் ஒரு படகில் அவுஸ்திரேலியாவுக்கு வேலை தேடி புறப்பட்டு சென்றனர்.

இவர்களில் 61 பேர் இலங்கை தமிழர்கள். 4 பேர் சிங்களர்கள் ஆவார்கள். இலங்கை பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து அவுஸ்திரேலியா புறப்பட்டனர். அவர்கள் சென்ற படகின் என்ஜினீல் திடீரென பழுது ஏற்பட்டது.

இதனால் படகு நடுக்கடலில் தத்தளித்தது. காற்று அடித்த திசை நோக்கி படகு நகர்ந்தது. அதன்படி சென்னை மகாபலிபுரம் அருகே நடுக்கடலில் சிங்களர்கள் படகு தத்தளித்த படி நின்றது. அப்போது அப்பகுதியில் நாகை கீச்சாங் குப்பத்தை சேர்ந்த தம்பிராஜன் உள்ளிட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அவர்கள் நடுக்கடலில் தத்தளித்த 65 பேரையும் மீட்டனர். பின்னர் தங்கள் படகுகளில் ஏற்றி நாகை துறைமுகத்திற்கு இன்று (14) காலை அழைத்து வந்தனர். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகை டி.எஸ்.பி. நீதி மோகன் மற்றும் பொலிஸார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் 65 பேரையும் பத்திரமாக அழைத்து சென்றனர்.

பின்னர் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னர் சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகிறது. கடலில் தத்தளித்தவர்களை மனிதாபிமான முறையில் மீட்டு வந்த நாகை மீனவர்களை பொது மக்கள் பாராட்டினார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply