இஸ்லாமியரிடம் பாகுபாடு வேண்டாம் – பிரியாவிடை உரையில் ஒபாமா

கடந்த 20008-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள சூழலில், சிகாகோவில் ஆற்றிய தனது பிரியாவிடை உரையில் .அமெரிக்க அதிபராக தான் பதவி வகித்த காலத்தை நினைவு கூர்ந்தார்.தனக்கும், தனது மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியான மிஷெல் ஒபாமாவுக்கும் ”எல்லாம் எங்கு தொடங்கியதோ” , அந்த இடத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று தான் விரும்பியதாக தனது உரையில் ஒபாமா தெரிவித்தார்.

தனது பிரியாவிடை உரையை அமெரிக்க அதிபர் மாளிகைக்கு பதிலாக சிகாகோவில் நிகழ்த்தினார்.

நம்பிக்கை மற்றும் மாற்றத்தை கொண்டு வருவோம் என்ற முற்போக்கான செய்தியை முன்வைத்து கடந்த 2008-ஆம் ஆண்டில் நாட்டின் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவருக்கு வயது 55.

அண்மைய அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை, டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு , சிகாகோவில் தனது பிரியாவிடை உரையை ஒபாமா நிகழ்த்தினார் .

”நமது நாட்டை அச்சறுத்தி வந்த தீவிரவாத சக்திகள் பலவும் முறியடிக்கப்பட்டுள்ளன” என்று ஒபாமா அக்கூட்டத்தில் தெரிவித்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது அமெரிக்கா ஒவ்வொரு அம்சத்திலும் அமெரிக்கா முன்னேறியுள்ளதாகவும், தற்போது அமெரிக்கா ஒரு வலுவான நாடாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

”இந்த எட்டு ஆண்டுகளில் எந்த தீவிரவாத அமைப்பும் அமெரிக்காவை தாக்கவில்லை” என்று தனது உரையில் குறிப்பிட்ட ஒபாமா, அமெரிக்காவுக்கு வெளியில் இருந்து வரும் தாக்குதல்களில் இருந்து நாட்டின் ராணுவம் மக்களை காப்பாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், ”ஆனால், அமெரிக்கர்களான நாம், நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும். இஸ்லாமியர்கள், பெண்கள் மற்றும் ஒரு பாலுறவுக்காரர்களை பாகுபடுத்தி பார்க்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply