ஈராக்கில் 400 பேரை புதைத்த ராட்சத சவக்குழி கண்டுபிடிப்பு

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சண்டை நடக்கிற பகுதிகளில் இருந்து உள்ளூர் மக்கள் தப்பிச்செல்ல முயற்சிக்கையில் அவர்களைப் பிடித்துக்கொன்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.கடந்த ஆண்டு பிரபல செய்தி நிறுவனம் ஒன்று 72 இடங்களில் இப்படி கொன்று புதைக்கப்பட்டவர்களின் ராட்சத சவக்குழிகளை கண்டறிந்து, அவற்றில் 5 ஆயிரத்து 200 முதல் 15 ஆயிரம் உடல்கள் வரை புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

இந்த ராட்சத சவக்குழிகள் குறித்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய மக்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

இப்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து பெரும்பான்மையான நகரங்களை, ஈராக் படைகள் சண்டையிட்டு மீட்டு விட்டன.

அப்படி மீட்கப்பட்ட நகரங்களில் ஒன்று, ஹவிஜா. இந்த நகரம், ஈராக் தலைநகரம், பாக்தாத்தில் இருந்து 240 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நகரம், கடந்த மாதம்தான் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து வீழ்ந்தது.

இந்த நிலையில் அந்த நகரத்தில் 400 உடல்கள் ஒரே நேரத்தில் புதைக்கப்பட்ட ராட்சத சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சவக்குழியில் புதைக்கப்பட்ட உடல்களில் சில சாதாரண உடையுடனும், சில ஐ.எஸ். பயங்கரவாதிகள் மரண தண்டனை விதிக்கிறபோது அணிவிக்கிற உடையுடனும் (ஐம்ப்சூட்) காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹவிஜா நகரையொட்டி அமைந்திருந்த விமானப்படை தளத்தைத்தான் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றுகிற களமாக பயன்படுத்தி வந்துள்ளதாக கிர்குக் கவர்னர் ராகன் சேட் கூறி உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply