அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து லாரி ஓட்டுனர்களாக வேலை செய்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அரிசோனாவின் யூமா பிரிவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு முகவர்கள் ஆபரேஷன் செக்மேட் எனும் நடவடிக்கையின் கீழ் அமெரிக்காவில் வணிக வாகனங்களை இயக்கும் சட்டவிரோத நபர்களை கண்டறிந்து கைது செய்தனர். இதில் மொத்தம் 52 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 36 பேர் கனரக லாரிகளை ஓட்டி வந்ததும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட 36 சட்டவிரோத லாரி ஓட்டுனர்களில் 30 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
மேலும் வாசிக்க >>>














