நாடாளுமன்றை கலக்க காரணம் என்ன? மக்களுக்கு விளக்கமளிக்கும் ஜனாதிபதி

தற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் வகையில் 14 நாட்களுக்குள் ஜனாதிபதி மக்கள் முன் உரையாற்றும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். அந்தவகையில், பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்த பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான காரணத்தை ஜனாதிபதி விளக்கியுள்ளார்.

“2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி கொள்ளை அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அவற்றுடன் தொடர்பான விடயங்கள் மற்றும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியதை அடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட அரசியல் நிலைமை சூடுபிடித்த பின்னணியில் உறுப்பினர்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபாய் முதல் 150 மில்லியன் ரூபாய் வரையிலும் சிலவேளைகளில் இன்னும் சில உறுப்பினர்களின் பெறுமதி 500 மில்லியன் ரூபாயாகவும் விலைபோகும் நிலைமை ஏற்பட்டது. இதுவும் நாடாளுமன்றத்தை கலைக்க ஒரு காரணம்.

1947 முதல் இதுவரை இருந்து வந்தது நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை, நாடாளுமன்றத்தின் சம்பிரதாயம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது ஜனாதிபதிக்குரிய விஷேட அதிகாரங்களுக்கமைய பிரதமரை நியமித்ததை ஏற்றுக்கொள்ளாத தன்மையை ஏற்படுத்தி சபாநாயகரினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் அவரது நடத்தையும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான இரண்டாவது காரணமாக அமைந்தது.

நாட்டின் முக்கிய பிரச்சினைகள், வாழ்க்கைச் செலவு, சுபீட்சமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், உள்நாட்டு உற்பத்திகளை கட்டியெழுப்புதல், தூய்மையான வெளிநாட்டு முதலீடுகளை ஊழலின்றி பெற்றுக் கொள்ளுதல், ஒழுக்கமும் நன்னடத்தையும்மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புதல், ஜனநாயகத்தைப் பலப்படுத்துதல் ஆகிய அனைத்திற்கும் இத்தேர்தலை நடத்தி மக்களின் தீர்மானத்திற்கு அமைய ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கே நாடாளுமன்றத்தை கலைத்ததாக” கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply