ஒடிசாவில் மனைவி உடலை சுமந்து சென்ற தொழிலாளிக்கு பக்ரைன் பிரதமர் உதவி

mannar bhaharainஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் தனா மஜ்கி என்பவர் மனைவி உடல் நலம் இல்லாமல் மரணம் அடைந்த போது சொந்த ஊருக்கு உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை இதனால் தனா மஜ்கி தன் மனைவி உடலை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு தோளில் சுமந்தபடி சென்றார்.

தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் கலெக்டர் தனாவுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்தார். என்றாலும் மனைவி உடலை 10 கி.மீ தொலைவுக்கு தனா தூக்கி சென்ற காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பக்ரைன் நாட்டு பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலீபா அந்த காட்சியை பார்க்க நேரிட்டது.

12 வயது மகள் அருகில் அழுது கொண்டே வர தனா மஜ்கி தன் மனைவி உடலை தோளில் சுமக்க முடியாமல் சுமந்து சென்ற அவலத்தைப் பார்த்ததும் பக்ரைன் பிரதமர் கண்கலங்கினார். உடனே அவர் தனாவுக்கு உதவி செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து பக்ரைன் நாட்டு அதிகாரிகள் அங்குள்ள இந்திய தூதரகத்திடம் தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர். ஒடிசாவில் உள்ள தனாஷின் முகவரி மற்றும் செல்போன் எண் ஆகியவை சேகரித்து கொடுக்கப்பட்டன.

தனாவுக்கு பெரிய அளவில் பண உதவி செய்ய பக்ரைன் பிரதமர் விருப்பம் தெரிவித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply