ஏஞ்சலே மார்க்கல் உடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் திடீர் ஆலோசனை

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலே மெர்க்கல் உடன் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசினார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் சூழல் குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தினர். மற்றும் வடகொரியா நாட்டினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து பேசினர்.

உக்ரைன் விவகாரத்தில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் மேற்கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தை முயற்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு என்று மீண்டும் டிரம்ப் உறுதியாக தெரிவித்தார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசி வருகின்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் கூட தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply