வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்திய கப்பல் கொழும்பு சென்றடைந்தது

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மலைப் பிரதேசங்களான கல்லே, கெகல்லே, ராத்னபுரா, கலுதரா, மதரா மற்றும் ஹம்பந்தோட்டா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கீலனி ஆறு மற்றும் காலு கங்காவின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மழை வெள்ளத்திற்கு இதுவரை 90-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மழை வெள்ளத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருந்த இந்திய பிரதமர் மோடி
‘பாதிக்கப்பட்டு உதவியை எதிர்பார்க்கும் இலங்கை மக்களுக்கு நாங்கள் துனையாக இருப்போம்” என டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக அத்தியாவசிய நிவாரண பொருட்களுடன் இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் கிரிஜ் இன்று கொழும்பு சென்றடைந்தது. பின்னர், நிவாரண பொருட்களை இந்திய அதிகாரிகள் இலங்கை அரசிடம் ஒப்படைத்தனர். மேலும், ஒரு கப்பல் நாளை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply