நேபாள பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இடதுசாரிகள் வெற்றிமுகம்

நேபாள நாட்டில் கடந்த மாதம் 26–ந் தேதி, டிசம்பர் 7–ந் தேதி என இரண்டு கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பெருந்திரளாக வாக்களித்தனர். இந்த ஓட்டுகளை எண்ணும் பணி கடந்த 8–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அங்கு 275 இடங்களை கொண்ட பாராளுமன்ற தேர்தலில் 165 உறுப்பினர்கள் ஒற்றை உறுப்பினர் தொகுதிகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மீதி 110 இடங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஒற்றை உறுப்பினர் தொகுதிகளான 165 இடங்களில் 92 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அவற்றில் நேபாள கம்யூனிஸ்டு கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு), நேபாள கம்யூனிஸ்டு கட்சி (மாவோயிஸ்டு சென்டர்) அடங்கிய இடதுசாரி கூட்டணி 73 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இதில், முன்னாள் பிரதமர் கே.பி. ஒளி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு) 51 இடங்களைக் கைப்பற்றி உள்ளது.

மற்றொரு முன்னாள் பிரதமர் பிரசந்தா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி (மாவோயிஸ்டு சென்டர்) 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்த ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 2 மாதேசி கட்சிகள் தலா 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மற்றவர்கள் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

தொடர்ந்து இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply