ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவை துண்டிக்கும் சட்ட மசோதா: பிரிட்டன் பாராளுமன்றத்தில் நிறைவேறியது

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பிரிட்டனில் இருந்து விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, வரும் 29-3-2019-க்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மும்முரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்வது தொடர்பாக பிரிட்டன் பாராளுமன்ற கீழவையில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்திற்குப் பிறகு இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 650 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபையில், மசோதாவை ஆதரித்து 324 உறுப்பினர்கள் வாக்களித்ததால் மசோதா நிறைவேறியது. பிரெக்சிட் விவகாரத்தில் இந்த மசோதா முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

இனி இந்த மசோதா பாராளுமன்ற மேல்சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். மேல் சபையில் இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசப்படும்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவை பிரிட்டன் திரும்பப்பெற வேண்டும் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply