எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

Tuesday, November 29th, 2022 at 7:52 (SLT)

ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக்கொண்டு அவர்களை விரட்டியடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறைபிடிப்பதும் வாடிக்கையாகவே இருக்கிறது.

மேலும் வாசிக்க >>>

உலகின் வலிமையான அணுசக்தி நாடாக மாறுவதே இலக்கு: கிம் ஜாங் அன்

Tuesday, November 29th, 2022 at 7:47 (SLT)

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் அந்த நாடு விரைவில் 7-வது அணு குண்டு சோதனையை நடத்த தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேற்று ‘ஹவாசோங்-17’ என்கிற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஆய்வு செய்து, பின்னர் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் வாசிக்க >>>

டயனா கமகே குடியுரிமை விவகாரம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Monday, November 28th, 2022 at 13:12 (SLT)

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை அமெரிக்கா செல்கிறார்

Monday, November 28th, 2022 at 13:06 (SLT)

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஐஸ் போதைப்பொருள் குறித்து அதிரடி அறிவிப்பு

Monday, November 28th, 2022 at 12:49 (SLT)

ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டினால் மனநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக மனநோய் சிறப்பு மருத்துவர் டொக்டர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இங்கிலாந்தில் சிறு வயதில் இயற்பியல் பாடத்தில் தோல்வி : 84 வயதில் மீண்டும் பள்ளி செல்லும் முதியவர்

Monday, November 28th, 2022 at 8:06 (SLT)

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எர்னி பஃபெட் என்ற 84 வயது முதியவர், சிறு வயதில் பள்ளியில் படித்த போது இயற்பியல் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். அந்த பாடத்தில் வெற்றி பெற தொடர்ந்து 5 முறை தேர்வு எழுதிய போதும், அவரால் அதில் வெற்றி பெற முடியாததால் தனது முயற்சியை அவர் கைவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.46 கோடியாக உயர்வு

Monday, November 28th, 2022 at 8:00 (SLT)

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் வாசிக்க >>>

கேமரூனில் நிலச்சரிவு இறுதி சடங்கில் பங்கேற்ற 14 பேர் பலி

Monday, November 28th, 2022 at 7:57 (SLT)

கேமரூன் தலைநகர் யவுண்டே கனமழை காரணமாக இந்த ஆண்டு பல பேரழிவை சந்தித்தது. வெள்ளத்தால் அந்த பகுதியின் உள்கட்டமைப்பு சிதைந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் வீதியில் இறங்க தயார்:சஜித் பிரேமதாஸ

Sunday, November 27th, 2022 at 13:26 (SLT)

இப்போது நாட்டில் எல்லாமே தலைகீழாகவே நடப்பதாகவும், நாட்டு மக்கள் ஒன்றாக கூடுவது தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பெரும் அச்சம் கொண்டிருருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அனுமதியின்றி வீதியில் செல்ல வேண்டாம் எனக் கூறுவதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் வௌிநாட்டு தபால் துறையில் வருமானம் அதிகரிப்பு

Sunday, November 27th, 2022 at 13:20 (SLT)

இலங்கையில் இருந்து தபால் திணைக்களத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பதுளை வெவெஸ்வத்த பிரதேசத்தில் தந்தையை அடித்துக் கொன்ற மகன்

Sunday, November 27th, 2022 at 13:11 (SLT)

பதுளை வெவெஸ்வத்த பிரதேசத்தில் மகன் ஒருவர் தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். பதுளை வெவஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உலக கோப்பை கால்பந்து முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்

Sunday, November 27th, 2022 at 7:14 (SLT)

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இதற்கு பதிலடியாக 68 வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் கோல் அடித்தார். இதனால் போட்டி சமநிலையை எட்டியது.

மேலும் வாசிக்க >>>

தோல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கடற்கரையில் நூதன முறையில் பிரச்சாரம் செய்த மக்கள்

Sunday, November 27th, 2022 at 7:09 (SLT)

சர்வதேச அளவில் தோல் புற்றுநோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. அங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் சூரிய கதிர்கள் உடல் மீது படும் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு என மருத்துவர்கள் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று விழிப்புணர்வு போட்டோ சூட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

மிளகாய் தூளில் 50 சதவீத கலப்படம்

Saturday, November 26th, 2022 at 13:34 (SLT)

சந்தைக்கு மிளகாய்த் துண்டுகள் மற்றும் மிளகாய்த் தூளை விநியோகித்துக் கொண்டிருந்த லொறியொன்றை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அம்பலாங்கொடை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையில் மிளகாய் தூள் மற்றும் மிளகாய் துண்டுகளில், 50 சதவீதமான உப்பு, கோதுமை மா மற்றும் கலரிங் கலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

சம்மாந்துறையில் போதைப்பொருட்களுடன் திருமணமான 27 வயதுப் பெண் கைது

Saturday, November 26th, 2022 at 13:25 (SLT)

போதைப்பொருட்களுடன் 27 வயது பெண்ணொருவர் சம்மாந்துறை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (நவ 25) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் வாசிக்க >>>