சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் கைது

Friday, November 11th, 2022 at 13:06 (SLT)

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும், முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

பேச்சுவார்த்தைக்கு வருமாறு இலங்கை தமிழ் கட்சிகளுக்கு ரணில் அழைப்பு

Friday, November 11th, 2022 at 7:58 (SLT)

இலங்கை தமிழர் பிரச்சினை பல்லாண்டு காலமாக நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண போடப்பட்ட ஒப்பந்தங்கள் பலன் அளிக்கவில்லை. விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுத போராட்டம், கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது நடந்த இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61.88 கோடியாக உயர்வு

Friday, November 11th, 2022 at 7:53 (SLT)

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் வாசிக்க >>>

ஜப்பானிலிருந்து சொகுசு ஜீப் இறக்குமதி செய்து தருவதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி : ஒருவர் கைது

Thursday, November 10th, 2022 at 11:09 (SLT)

ஜப்பானிலிருந்து பிராடோ ரக ஜீப் ஒன்றை இறக்குமதி செய்வதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அருட்தந்தை ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று (09) உத்தரவிட்டுள்ளார். நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கோவில் பிரச்சினை அவுஸ்திரேலிய நாட்டவர் மீது வாள்வெட்டு

Thursday, November 10th, 2022 at 11:00 (SLT)

கோவில் பிரச்சினை தொடர்பாக வடமாகாண அளுநரிடம் முறையிட்ட அவுஸ்திரேலிய நாட்டவர் மீது இன்று காலை வாள்வெட்டுக் குழு ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

எதிர்வரும் 14ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிப்பு

Thursday, November 10th, 2022 at 10:55 (SLT)

நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பிக்கவுள்ளார். இதன் காரணமாக அன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

8 இலங்கையர்களுடனான கப்பலை கைப்பற்றியது நைஜீரியா

Thursday, November 10th, 2022 at 10:52 (SLT)

மத்திய ஆபிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் ஏறக்குறைய 04 மாதங்களாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான கப்பலை நைஜீரிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்: உலக வங்கியின் தலைவர்

Thursday, November 10th, 2022 at 10:48 (SLT)

கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக உடன்படுவதற்கு இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு மற்றும் தனியார் துறை கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் (David Malpass) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஊக்குவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடைய வாய்ப்பு : ஐ.நா. எச்சரிக்கை

Thursday, November 10th, 2022 at 10:45 (SLT)

இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை, குறுகிய காலப்பகுதிக்குள் இரு மடங்காகியுள்ளதாக புதிய அறிக்கையொன்றின் ஊடாக ஐ.நா. சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: பிரதிநிதிகள் சபையை கைப்பற்றுகிறது டிரம்ப் கட்சி

Thursday, November 10th, 2022 at 10:43 (SLT)

அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடந்தது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

மேலும் வாசிக்க >>>

ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் 50 லட்சம் ஏக்கர் காடுகள் அழிப்பு : ஜெலன்ஸ்கி

Thursday, November 10th, 2022 at 10:40 (SLT)

உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன.

மேலும் வாசிக்க >>>

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி

Thursday, November 10th, 2022 at 10:36 (SLT)

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 2018, 2019 ஆண்டுகள் மற்றும் 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 300 நபர்கள் அமர கூடிய வளாகத்திற்கான ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் வாசிக்க >>>

இங்கிலாந்து அமைச்சர் ராஜினாமா : பிரதமர் ரிஷி சுனக்குக்கு பின்னடைவு

Thursday, November 10th, 2022 at 10:32 (SLT)

இங்கிலாந்தின் ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார். பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை விடுவிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

மேலும் வாசிக்க >>>

நாடு வங்குரோத்தடைந்துள்ளமைக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு : பிரசன்ன ரணதுங்க

Wednesday, November 9th, 2022 at 22:59 (SLT)

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.தற்போதைய பொருளாதார பாதிப்பை ஒரு அரசாங்கத்தின் மீது மாத்திரம் பொறுப்பாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

11000 ஊழியர்களை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்

Wednesday, November 9th, 2022 at 22:55 (SLT)

பிரபல சமூக வலைத்தளமன பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து 11000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இத்தகவலை அறிவித்துள்ளது. வருவாய் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 11000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>