இலங்கையில் இணைய சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

Friday, May 17th, 2024 at 7:51 (SLT)

இணையத்தில் சிறார்களை துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்க அமைப்பு ஒன்று இலங்கைக்கு அறிவித்துள்ளது. அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு நீதிமன்றம் சென்ற பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

புலிப் பயங்கரவாதிகள் அழிந்ததில் எங்களுக்கு சந்தோசமே முஸ்லிம்கள் மீது விரல் நீட்ட வியாழேந்திரன் யார்?: கேள்வி எழுப்பியுள்ள சபீஸ்

Thursday, May 16th, 2024 at 12:48 (SLT)

எமது உடமைகளை எடுத்துக் கொண்டு எங்களது மக்களை அழிக்க முற்பட்ட பாசிச புலிப்பயங்கரவாதிகள் அழிந்ததில் எங்களுக்கு சந்தோசமே. தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதைப் போல் எங்களது மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே தர்மமாகும். அந்த நீதி பிறழ்வால் பிரபாகரன் அழிந்து போனது வரலாறு என கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைப்பின் பொருளாளரும், கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்

மேலும் வாசிக்க >>>

யாழில் பிடிபட்ட ஐஸ் போதை உற்பத்தி மையம் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

Thursday, May 16th, 2024 at 12:44 (SLT)

இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதை பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு , போதைப்பொருள் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு இருந்தது.

மேலும் வாசிக்க >>>

500 டிப்ளோமா ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் : அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப்பு

Thursday, May 16th, 2024 at 12:40 (SLT)

500 டிப்ளோமாதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த நியமனம் வழங்கப்படும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்

Thursday, May 16th, 2024 at 8:40 (SLT)

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல சந்திப்புகளில் ஈடுபட்டார். தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்க தூதர் ஜீலி சங் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேலும் வாசிக்க >>>

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிபிரயோகம் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்

Wednesday, May 15th, 2024 at 21:51 (SLT)

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

போர் பிரச்சினைக்கு தீர்வு அல்ல : மகிந்த ராஜபக்ச

Wednesday, May 15th, 2024 at 12:40 (SLT)

போரினால் பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்மொழியப்பட்டு, இம்தியாஸ் பாக்கீர் மாக்காரினால் வழிமொழியப்பட்ட யோசனை மீதான விவாதம் இன்று இலங்கையின் நாடாளுமன்றில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

எனக்கு வாக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை :எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

Wednesday, May 15th, 2024 at 12:35 (SLT)

எனக்கு வாக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நாட்டின் சிறுவர் தலைமுறைக்காக இந்த மதுபானம்,போதைவஸ்துக்கள் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

மேலும் வாசிக்க >>>

விஜயதாசவின் ஆட்சேபனைகள் நிராகரிப்பு

Wednesday, May 15th, 2024 at 12:32 (SLT)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவை நியமித்ததை சவாலுக்கு உட்படுத்தி அதன் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனு தொடர்பான தடை உத்தரவை பரிசீலிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (15) அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரர் கைது

Wednesday, May 15th, 2024 at 12:30 (SLT)

களுத்துறை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு வெசாக் கூடுகள் தயாரிப்பதற்காக சென்ற 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலுக்கு எதிராக முடியுமான அழுத்தங்களை அரசாங்கம் பிரயோகிக்க வேண்டும் : முஜிபுர் ரஹ்மான்

Wednesday, May 15th, 2024 at 8:35 (SLT)

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பலஸ்தீனுக்கு பணம் சேகரிப்பதற்கு பதிலாக இஸ்ரேல் அரசாங்கத்துக்கு எதிராக முடியுமான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன் ஹவ்தி போராளிகளை அடக்குவதற்கு எமது கடற்படையை செங்களுக்கு அனுப்பும் ஜனாதிபதி, இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வருவதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதித் தேர்தல் – பிரசார நடவடிக்கைகளை கையாளும் அமெரிக்கர்கள்: மறுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி

Wednesday, May 15th, 2024 at 8:28 (SLT)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசார நடவடிக்கைகளை கையாள்வதற்காக அமெரிக்க குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக கூறப்படுவதனை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திய இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Wednesday, May 15th, 2024 at 8:20 (SLT)

அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தேவையற்ற அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

காட்டுக்குள் இரவில் நடந்த மோசமான செயல் : யுவதிகள் உட்பட 21 பேர் கைது

Tuesday, May 14th, 2024 at 10:42 (SLT)

நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கைபேசியை சார்ஜில் போட முனைந்த 05 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Tuesday, May 14th, 2024 at 10:31 (SLT)

களுத்துறை – மக்கொனை பகுதியில் கையடக்க தொலைபேசி ஒன்றை சார்ஜ் செய்ய முயன்ற ஐந்து வயதுச் சிறுமியொருவர், மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>