இங்கிலாந்து-பிரான்சில் கடும் பனிப்பொழிவு: ஜெர்மனியில் 330 விமானங்கள் ரத்து

December 11th, 2017 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குளிர்காலம் தொடங்கிவிட்டதால் வட ஐரோப்பிய நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மைனஸ் 0 டிகிரிக்கும் கீழ் தட்பவெப்ப நிலை சென்று விட்டதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறிவிட்டது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பனி மழை கொட்டுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மீள பணிக்கு அழைப்பு

December 11th, 2017 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சேவையாற்ற விரும்பும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை இலங்கை ரயில்வே தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய ஓய்வு பெற்ற ரயில் எஞ்சின் சாரதிகள், ரயில் பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோருக்கே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நீதிபதி இளஞ்செழியனிற்கு இடமாற்றம்

December 11th, 2017 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறுகின்றேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று யாழ். நீதிமன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி 16–ந் தேதி பதவி ஏற்கிறார்

December 11th, 2017 editor Posted in இணையத்தள செய்தி No Comments »

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 16–ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கட்சியின் தலைவராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள். எனவே ராகுல்காந்தி போட்டியின்றி காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நேபாள பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இடதுசாரிகள் வெற்றிமுகம்

December 11th, 2017 editor Posted in இணையத்தள செய்தி No Comments »

நேபாள நாட்டில் கடந்த மாதம் 26–ந் தேதி, டிசம்பர் 7–ந் தேதி என இரண்டு கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பெருந்திரளாக வாக்களித்தனர். இந்த ஓட்டுகளை எண்ணும் பணி கடந்த 8–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அங்கு 275 இடங்களை கொண்ட பாராளுமன்ற தேர்தலில் 165 உறுப்பினர்கள் ஒற்றை உறுப்பினர் தொகுதிகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மீதி 110 இடங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது துப்பாக்கி சூடு: சுஷ்மாவின் உதவியை நாடும் பெற்றோர்

December 10th, 2017 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐதராபாத் உபால் பகுதியை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 30). இவர் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரில் உள்ள டெவ்ரி பல்கலைகழகத்தில் மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நெட்வொர்க்கிங் மற்றும் டெலிகம்யூனிகேசன்ஸ் படித்து வருகிறார். இவர் நேற்று சிகாகோவின் அல்பேனி பார்க் அருகில் நடந்து சென்றபோது, அவரை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டான். இதில், பலத்த காயமடைந்த முகமது அக்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கட்சிக்கு எதிராக செயற்படுபவர்களை இனியும் பார்த்திருக்க முடியாது : ஜனாதிபதி

December 10th, 2017 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கு உழைக்காத ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் அரசியல் யாப்புக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ல.சு.கட்சியை பிரிப்பதற்கோ, பலவீனப்படுத்துவதற்கோ யாருக்கும் தான் இடமளிக்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அமெரிக்காவில் அலாஸ்காவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

December 10th, 2017 editor Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் தென்மேற்கு பகுதியில் நேற்று 5.0 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் அதிர்ந்தது. வீடுகள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்ட வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

அலாஸ்காவின் அத்கா நகரின் தென்மேற்கு பகுதியில் சுமார் 83 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 46.8 கிலோமீட்டர் ஆழத்தில் 5.0 ரிக்டரில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலில் வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு அலைகள் எழும்பின. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

குஜராத் சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்ட உலகின் மூத்த வாக்காளர்

December 10th, 2017 editor Posted in இணையத்தள செய்தி No Comments »

குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி முதற்கட்டமாக 89 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மாலை 5 மணியளவில் நிறைவடைந்த தேர்தலில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பாகிஸ்தான் பயணத்தை ஒத்திப்போடுங்கள் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தல்

December 10th, 2017 editor Posted in இணையத்தள செய்தி No Comments »

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்கிறது. அங்கு மனித வெடிகுண்டு தாக்குதல், கார் குண்டுவெடிப்பு, கண்ணிவெடி தாக்குதல், கையெறி குண்டுவீச்சு என பல்வேறு வகையிலான தாக்குதல்களை பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குங்கள் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிற நிலையில், குறிப்பிடத்தக்க வகையில் எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்: அமெரிக்க முடிவை நிராகரித்த ஐ.நா.

December 9th, 2017 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளதை ஐ.நா. பாதுகாப்பு சபை நிராகரித்துள்ளது.கடந்த 1948 மே மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் வசமும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன. அதன்பிறகு 1967-ல் நடந்த அரபு போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பொலிஸ் மா அதிபர் விசேட பணிப்புரை

December 9th, 2017 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொலிஸ் திணைக்களத்தில் மேற்கொள்ளப்படும் சகலவிதமான இடமாற்றங்களையும் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பணிப்புரை விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமையினாலேயே குறித்த இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இஸ்ரேல் தலைநகரா ஜெருசலேம்?: டிரம்ப் முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் கண்டனம்

December 9th, 2017 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அடுத்த ஆண்டிற்கான அதிகாரப்பூர்வமான நிறம் இதுதான் !

December 9th, 2017 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அடுத்த ஆண்டிற்கான(2018), அதிகாரப்பூர்வமான நிறம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் இப்படி நிறம் அறிவிக்கப்படுவது வழமை. அதேபோல் இம்முறையும் அடுத்த வருடத்திற்கான நிறம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டிற்கான அதிகாரப்பூர்வமான நிறம் இதுதான் ! Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கரூரில் இலங்கைச் சிறுமிக்கு நேர்ந்த அவலம்

December 9th, 2017 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அகதியாக கரூரில் தங்கியிருக்கும் இலங்கைச் சிறுமி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற குற்றச்சாட்டில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள். வசதியில்லாததால் பாடசாலையைக் கைவிட்டவர் இச்சிறுமி. இவரது குடும்பம் மூன்று தலைமுறைகளாக கரூரில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகிறது.

சிறுமியின் தாய்க்கு ஏற்கனவே அறிமுகமான சரண்யா (27) என்பவர், வீட்டில் இருந்த அச்சிறுமிக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கிறார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button