ஐ.பி.எல். தொடருக்காக ரூ. 3.20 கோடிக்கு ஏலம் போன தொழிலாளியின் மகன்.

cruketஇந்திய கிரிக்கெட் திருவிழாவான, 9வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்குகிறது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நேற்று நடந்தது.இதில், பல ஆச்சரியமான விஷயங்கள் நடந்துள்ளன. ராஜஸ்தானை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நட்டு சிங்கை, மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.3.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஆனால் இவரின் அடிப்படை விலை வெறும் ரூ.10 லட்சம்தான். 20 வயதே ஆன நட்டு சிங், மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.

இவரது தந்தை பரத் சிங் ஜெய்ப்பூரில் ஒரு கம்பி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். மகனின் இந்த சாதனை கூட அவருக்கு தெரியாது. நேற்று ஏலம் நடந்து கொண்டிருந்தபோது கூட, தொழிற்சாலையில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார். நிருபர்கள் அவரை பேட்டி எடுக்க முயன்றபோதுதான், அவருக்கு இந்த தகவலே தெரியவந்தது.

அதிர்ஷ்ட தேவதையின் பார்வை பட்டு, இவ்வளவு தொகைக்கு ஏலம் போனது குறித்து உருக்கமாக பேசிய நட்டு சிங், முதலில் எனது பெற்றோருக்காகவும், தம்பிக்காகவும் பெரிய வீடு ஒன்றை கட்டி தருவேன் என்றார். அவர் மேலும் கூறுகையில், ஐபிஎல்லில் சிறப்பாக விளையாட முன்னுரிமை தருவேன். அதில் எனது திறமையை நிரூபிப்பேன். இந்திய அணியில் இடம் பிடிக்க, இதை அடித்தளமாக பயன்படுத்தி கொள்வேன் என்றார். கலக்க காத்திருக்கும் சகோதரர்கள்: இதேபோல் அனைவரும் ஆச்சரியப்பட வைத்துள்ள மற்றொரு வீரர் குர்னல் பாண்ட்யா. இவரது அடிப்படை விலையும் ரூ.10 லட்சம்தான். ஆனால் ஏலம் போனதோ, ரூ.2 கோடிக்கு. மும்பை இந்தியன்ஸ் அணிதான் இவரையும் ஏலத்தில் எடுத்தது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் அறிமுகமான ஹர்திக் பாண்ட்யாவின் உடன் பிறந்த அண்ணன்தான் இவர்.

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு தேர்வாகி இருப்பதாலும் குர்னல் பாண்ட்யா இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பதாலும், 2016ம் ஆண்டு அவர்களுக்கு சிறப்பாக தொடங்கியுள்ளது. மேலும் அவர்களது குடும்பத்தினரும் இரட்டை குஷியில் உள்ளனர். இதில், மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இருவருமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர். கும்ப்ளேவின் ஆலோசனை ஏலம் குறித்து மும்பை அணியின் உரிமையாளர் நீடா அம்பானி கூறுகையில், ஏலத்திற்கு முந்தைய நாள் இரவு, ஆலோசனை பெறுவதற்காக அனில் கும்ப்ளேவை சந்தித்தேன். அவரது ஆலோசனைகள் உதவி செய்தது என்றார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசராக இருந்த கும்ப்ளே, கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply