ராஜபக்சக்கள் குடும்பத்திடம் நட்ட ஈடு கோரும் தொழிலதிபர்: இரண்டு வாரங்கள் காலவகாசம்

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோரிடம் 50 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

வட்டியுடன் கூடிய பணத்தை இரண்டு வாரங்களுக்குள் செலுத்த தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒருமுறை பாவனைக்குட்படுத்தக் கூடிய சுகாதார பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலதிபர் காலிங்க சில்வா, சட்டத்தரணி பிரமோத் பொல்பிட்டிய ஊடாக கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளதாக கூறப்பட்டள்ளது.

2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக தனது வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக குற்றம் சுமத்திய அவர் இதன் விளைவாக 50 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நாளாந்த மின்வெட்டு போன்றன காரணங்களால் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் நட்டத்திற்கான பொறுப்பை கோட்டாபய ராஜபக்ச,மஹிந்த ராஜபக்ச,பசில் மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோரே ஏற்க வேண்டும் என குறித்த தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.மேலும், அவர்கள் மீதான பொது நம்பிக்கையை மீறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply