விமானத்தில் பயணியிடம் ரூ.1.75 கோடி மதிப்பு பணம்-கைக்கடிகாரங்கள் திருட்டு

filetதுருக்கியை சேர்ந்த வர்த்தகர் முஸ்டசா காசி (39). அவர் கைக்கடிகார வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரம் விஷயமாக துபாயில் இருந்து ஹாங்காங்குக்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்தார்.விமானம் நடுவானில் பறந்த போது இவர் எடுத்துச் சென்ற லக்கேஜில் இருந்து விலை உயர்ந்த ரோலெக்ஸ் மற்றும் பாடெக்பிலிப்பி என்ற 2 கைகடிகாரங்களையும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளையும் காணவில்லை. அவற்றை யாரோ திருடி விட்டனர். அதன் மதிப்பு ரூ.1 கோடியே 75 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஹாங்காங் போலீசில் புகார் செய்யப்பட்டது. விமானம் வந்து சேர்ந்ததும் விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

விமானத்தில் இது போன்று திருட்டுகள் நடைபெறுவதில்லை. சர்வதேச கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியிருக்கலாம். தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் வேறு எதுவும் தெரிவிக்க இயலாது என எமிரேட்ஸ் விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply