இந்தோனீஷியாவில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேறியது

indonesiaபோதைப் பொருள் கடத்தல் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகளுக்கு, தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தோனீஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நுஸா கம்பங்கன் சிறை தீவில், மூன்று நைஜீரிய நாட்டவரும், இந்தோனீஷியாவைச் சேர்ந்த ஒருவரும் துப்பாக்கிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக துணை அட்டார்னி ஜெனரல் நூர் ரச்மட் தெரிவித்தார்.

பெரும்பாலும் வெளிநாட்டவர்களைக் கொண்ட, 14 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று இந்த வாரத் துவக்கத்தில் அட்டார்னி ஜெனரல் தெரிவித்திருந்தார். நான்கு பேருக்கு மட்டும் இன்று தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள 10 பேருக்கான தண்டனை நிறைவேற்றல், கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

கைதிகளின் உறவினர்கள், பல்வேறு நாட்டு அரசுகள் மற்றும் மனித உரிமைக் குழுவினர், தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று இந்தோனீஷிய அரசை வலியுறுத்தியுள்ளன.ஆனால், மரண தண்டனையை நிறைவேற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உள்ளூர் மற்றும் சரவதேச விதிகளுக்கு எதிரானது என்றும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் கண்டித்துள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவது, போதைப் பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்பதுதான் என்றும், மீதமுள்ள 10 பேரின் தண்டனை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் துணை அட்டார்னி ஜெனரல் தெரிவித்தார்.

ஏழு சிறைகளைக் கொண்ட நுஸா கம்பங்கன் தீவில், 1400 கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைத் தவிர, சிறைக் காவலர்கள் மட்டுமே அங்கு இருக்கிறார்கள். பல்வேறு மறைவான இடங்களில் வைத்து, கைதிகள் துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply